கருணா தலைமையில் புதிய அரசியல் கட்சி!

கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடலொன்று 11.02.17 கருணா தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலுக்காக யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை, கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து மக்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இதற்கமைய தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் கட்சியை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் செயலாளராக மட்டக்களப்பைச் சேர்ந்த வி.கமலதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

download-1download-2