கறுப்பு யூலையை நினைவு கூரும் முகமாக லண்டனில் இடம்பெற்ற போராட்டம்.

36ஆம் ஆண்டு கறுப்பு யூலையை நினைவு கூரும் முகமாக No 10, Downing Streetஇல் அமைந்துள்ள பிரித்தானியா பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக மாபெரும் போராட்டம் ஒன்று 21/07/2019 அன்று நடைபெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இப் போராட்டத்தில் பலர் கலந்து கொண்டு தங்களின் குரல்களை எழுப்பினர்.   

 “கறுப்பு யூலை” என்பது யூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாத அரசின் கைக்கூலிகளினால் தமிழர்கள் மேல் கட்டவிழ்த்த இனப்படுகொலையாகும். இக் கொடிய துயரிய சம்பவத்தில் 3000க்கும் மேற்ப்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டும் அவர்களின் பல சொத்துக்களும் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டன.

1956ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை, இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக இவனவழிப்புக்கள் நடைபெறும் சர்வதேசத்திடமிருந்து நீதி கிடைக்காமல் காலம் சென்று கொண்டே இருக்கின்றது. இதனை வேற்றின மக்களுக்கு தெரிவிக்கும் முகமாக இவனவழிப்பு சம்பந்தமான பதாகைகள் போராட்டத்தில் வைக்கப்பட்டிருந்தன.