10484790_305944689614518_4756619264135674191_n

கல்லறைக்குள் தமிழனின் ‘கனவுகள்’ கருக்கொண்டு கிடக்கின்றன!

இது கார்த்திகை மாதம்!

கண்ட கனவுகள் பலிக்கும் மாதம்!!!
கல்லறைகள் பூ பூக்கும் மாதம்!!!

எத்தனை ‘வலி’ சுமந்தோம்?
எத்தனை’உயிர்’ கொடுத்தோம்?
எல்லாமே வீண்தானா?

இல்லை

கல்லறைக்குள் தமிழனின் ‘கனவுகள்’ கருக்கொண்டு கிடக்கின்றன!
சிந்திய குருதியின் சூடு தணியாமல் கிடக்கின்றது!
மனங்களில் மாறாத வடுக்கள் கிடக்கின்றது!
நாம் செய்வது?

வேள்வி,தியாக வேள்வி,நீண்ட வேள்வி!

முடிவதற்கு மாதங்கள் ஆகலாம்! வருடங்கள் ஆகலாம்! யுகங்களும் ஆகலாம்! ஆனால்

தமிழன் செய்த வேள்வி வீணானதில்லை,அதைச் சரித்திரம் சொல்கிறது.

எங்கள் வானம் திறந்து மழை பொழியும்!
எங்கள் வயல் செழிக்கும்!
காய்ந்து கிடக்கும் எங்கள் ‘பூவரசு’ பூ பூக்கும்!

நம்பு உன்னை நம்பு
உன் தேசத்தை நம்பு
தேசத்தின் புயல்களை நம்பு

நம்பிக்கை இல்லாதவன் நாற்பது அடி தள்ளி நில்லு.
நாளை பிறக்கும் நம் தேசத்தில்
நம்பிக்கை இல்லாதவனுக்கு இடமே இல்லை!!!!!

-அம்மு தமிழச்சி

(www.eelamalar.com)