கல்லறையில் உறங்கும் புனிதங்கள்…

சொந்தத் தேவைகளை நிறைவு செய்யாது
சொந்தம் விட்டோடி ஈழமண் மீட்பதற்கு
சொந்த ஊர்விட்டு சென்றீர் எம்மை
சொந்தங்களோடு வாழ வைப்பதற்கே
உல்லாசப் பயணங்களை ஊதியெறிந்து
உறங்காத தாயக நினைவுடன் மடிந்து
உலகம் போற்றும் சரித்திர மனிதர்கள்
உங்களை நாம் நாள்தோறும் வணங்குகின்றோம்
புயலாய் எழுந்தே தீமைகள் அழித்தீர்கள்
புறஞ்செறிந்த காவியம் இங்கே படைத்தீர்கள்
புதியதோர் வரலாற்றுப் பாதையிலே நீங்கள்.
புனிதத்தின் விதையாய் மண்ணில் புதைந்தீர்கள்
முகங்கள் எமக்குத் தெரியாது
முத்தான உயிரை எமக்கீந்து
முடிவொன்று காணப் பிறப்பெடுத்து
முத்திபெற்று மிகுபுகழும் அடைந்தீர்கள்
கனவினைச் சுமக்கும் நாளிலே
கல்லறையில் உறங்கும் புனிதருக்கு
கார்த்திகையில் தூய மலர் தூவி
காணிக்கை செய்கின்றோம் தெய்வ விளக்கே!

– க.சங்கீதன்

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”