Fotor1111113046-2

ஈழவிடுதலைப் போராட்டத்தில் சமர்களங்களின் நாயகன் எனதுயிர் அண்ணா பிரிக்கேடியர் பால்ராஜ்……..

“நீ போராட தீர்மானித்தால் பிரபாகரனின் விடுதலை இயக்கத்தில் இணைந்து போராடு அந்த இயக்கம்தான் சரியான நீதியான வழியில் போராடும்”
-கந்தையா(பால்ராஜ் அண்ணையின் தந்தை)

ஆழிப்பேரலையின்போது வாகரையில் அமைந்திருந்த கடற்கரை முகாமில் இருந்தார்.திடீரென கடல் உள்வாங்கப்பட்டு வழமைக்கு மாறாக அலைகள் உயர்ந்து வேகமாக வருவதைப் பார்த்த பால்ராஜ் அண்ணா ஏதோ ஆபத்து வரப்போகின்றது என்பதை உணர்ந்து வானத்தை நோக்கி சுடும்மாறு போராளிகளிடத்தில் சொன்னார் திடீரென துப்பாக்கி சத்தத்தை கேட்ட மக்கள் பலர் வீட்டுக்கு வெளியே வந்து பார்க்க கடல் உள்நோக்கி வருவதைக்கண்டு ஓடித்தப்பித்தனர் இதனால் பலபேர் காப்பாற்றபட்டனர்.

அதேவேளை கடற்கரை முகாமில் நின்றிருந்த பால்ராஜ் அண்ணா கடல் அலைகளுடன் கடுமையாக போராடி உயிர்தப்பினார்.

களமுனைகளில் சிங்களபடைகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் ஈழமக்கள் மனதில் என்றுமே சமர்கள நாயகனாகவும் வாழ்ந்த பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா……..!!!!!!

-செழியன்