கவனயீர்ப்பு போராட்டத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் எதிர்வரும் 10ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும் அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் தங்களது பிள்ளைகளை தேடித்தருமாறு கோரி கடந்த வருடம் மார்ச் 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் 364ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

ஆனாலும் அவர்களின் பிரச்சினைக்கு அரசாங்கமோ அல்லது ஏனைய தரப்பினரோ தீர்மானங்களை முன்வைக்காத நிலையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி எதிர்வரும் 10ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டமொன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.