சிலை வைக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்றால்
அதை உடைத்து எறிய மக்களுக்கு உரிமை இல்லையா?

வன்னி மண்ணில் பிரதேச சபையின் அனுமதியின்றி சட்ட விரோதமாக காந்தி சிலை வைக்கப்பட்டுள்ளது. மக்களின் விருப்பத்திற்கு மாறாக வைக்கப்பட்ட காந்திசிலை மக்களால் உடைத்து வீழ்த்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சிலை வைத்தவர்களை கைது செய்ய வேண்டிய பொலிஸ் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய முயற்சி செய்கிறது இதுகுறித்து முகநூலில் பதிவு செய்த நாலு இளைஞர்கள் மீது சிவமோகன் எம்.பி யின் செயலாளர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளாராம். தமிழ் இளைஞர்களை மிரட்டுவதற்காக பொலிசாரிடம் காட்டிக்கொடுக்கும் வேலையை சிவமோகன் எம்.பி செய்கிறார்.

தமது பதவி நலன்களுக்காக தமிழ் இளைஞர்களை காட்டிக் கொடுக்கவும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தயங்காது என்பதை சிவமோகன் நிரூபித்துள்ளார். சிறப்புமுகாமில் உண்ணாவிரதம் இருக்கும் அகதிகள் மீது இரக்கம் காட்டுங்கள் என்று அவர்களது உறவினர்கள் இதே வன்னி மண்ணில் கோரியுள்ளனர் இந்த உறவினர்கள் எழுப்பிய குரல் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்pனர் சிவமோகன் காதுகளில் கேட்கவும் இல்லை. அவர் இது குறித்து அக்கறை கொள்ளவும் இல்லை. வர்தா புயலினால் பாதிக்கப்பட்ட கும்மிடிப்பூண்டி அகதிகளுக்கு இன்னும் மின்சாரம்கூட வழங்கப்படவில்லை. அவர்களுக்கு இந்திய அரசு இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை.

அந்த கும்மிடிப்பூண்டி அகதிகளுக்கு உணர்வுள்ள சாதாரண தமிழக மக்களே தங்களால் இயன்ற உதவி செய்ய முனைகின்றனர். ஆனால் தமிழ் மண்ணில் 100 காந்தி சிலைகளை நிறுவியே தீருவோம் என அடம்பிடிக்கும் இந்திய அரசும் அதற்கு உதவும் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த அகதிகள் மீது அக்கறை கொள்ள மறுக்கின்றனர்.

இறுதியாக சிவமோகன் எம்.பி க்கு ஒரு வேண்டுகோள்!
காட்டிக் கொடுத்து பிழைப்பதைவிட கூட்டிக் கொடுக்கும் மாமா வேலை சிறந்தது. பேசாமல் போய் அந்த வேலையை பார்க்கவும்.

தமிழீழ மக்களின் குரலாய்
(பாலன் அண்ணா)

(www.eelamalar.com)