காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காக நீதி கோரி லண்டனில் மாபெரும் போராட்டம்!

இறுதி யுத்தத்தின் இறுதிக் கணங்களில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல் போயுள்ள சிறுவர்களுக்காக நீதி கோரும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பிரித்தானியத் தலைநகர் லண்டனில் நடைபெற உள்ளது.

பிரித்தானிய பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள இலக்கம் 10, டவுணிங்க் வீதியில் நாளை மதியம் 12:00 மணி முதல் மாலை 4:00 மணிவரை இப் போராட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

கடந்த காலங்களில் பல வகையான போராட்டங்கள் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட போதும் இது முற்றிலும் மாறுபட்ட விதமாக சிறுவர்களுக்கான போராட்டமாக ஏர்பாடாகியுள்ளமையால் கருத்து மோதல்களுக்கு அப்பால் இப் போராட்டத்திற்கு பல அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளைய போராட்டத்தில் பல்லாயிரம் மக்கள் குறிப்பாக அதிகளவிலான சிறுவர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானிய வாழ் எமது உறவுகள் அனைவரும் எமது உறவுகளுக்கான இப் போராட்டத்தில் கலந்து கொண்டு தாயகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்க வேண்டும் என்பதே காணமல் போன உறவுகள் சார்பான எதிர்பார்ப்பு.