காத்திருப்பது கரைந்து போவதற்கல்ல, நின் கடைக்கண்ணசைவில் காரியம் சாதிப்பதற்கே…

காத்திருப்பது கரைந்து போவதற்கல்ல…

போரில் வெடியாகி
புகழில் சுடராகிய
புரட்சி தமிழ் நெருப்பே…!!!

வானக் கடற்பரப்பை
வாழும் நிலப்பரப்பை
ஆண்ட புலிப் பிறப்பே…!!!

நின் திருவுருவை நான் மீளக் காண்பதெப்போது…

நின் திருவாய் மலர நான் கேட்பதெப்போது…

நின் கட்டளைக்கு நான் தாழ்பணிவதெப்போது…

நீ கைகாட்டும் திசையில் வெடி சுமந்து நான் புன்னகைப்பதெப்போது…

புலிகளின்தாகம் தமிழீழதாயகம் என்ற கோஷம் மீண்டும் விண்ணை பிளப்பதெப்போது…

தூயவனே முல்லை தீவு அம்மனுக்கும் உனக்கும் மட்டுமே தெரிந்த அதியுயர் ரகசியம் அம்பலமாவதெப்போது…

பலமுறை உன்னை கொன்ற சிங்களன் இம்முறையும் அதே பல்லவியை பாடிக்கொண்டிருக்கின்றான்.மரிப்பதற்கு நீ சாதாரண சராசரி மனிதல்ல நீயொரு அவதாரமென்பதை அகிலத்தின் செவிகளில் அறைவதெப்போது…

ஈழமே
ஈகமே
ஈரமே
ஈகையே

காத்திருப்பது கரைந்து போவதற்கல்ல, நின் கடைக்கண்ணசைவில் காரியம் சாதிப்பதற்கே…

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.
-பிரபாசெழியன்.