கனவுகளுடனே கரும்புலியாகிய வீரர்களே உங்களின் கனவும் ஒரு நாள் நனவாகும் இது உறுதி……….

download (2)இறுதி கட்ட முறியடிப்பு சமரினை வட்டு வாய்க்கள் பகுதி உடாக கரும்புலிகள் அணியினரே மேற்கொண்டனர்.15.05.2009 அன்று அதிகாலை 1.20 மணியளவில் வட்டுவாக்கால் தொடுவாய்ப்பகுதியுடக கரும்புலிகள் அணியினரே தாக்குதலினை தொடுத்தனர். கடல் வழியாக இருந்து சிறிய கரும்புலிப்படகொன்ரை கடற்கரையில் நினைகொண்டிருந்த காப்பரண் மீதான தாக்குதலினைத் தொடர்ந்து,படையணிகள் தாக்குதலுக்கு நகர்ந்தன.

அதிகாலை 03.05 மணியளவில் கரும்புலிகள் அணி ஒன்று காப்பரணை ஊடறுத்து நகர்ந்தது. இரண்டாவது அணியினர் சமரின் மையத்தில் நிலை கொண்டனர். அந்த அணிகளினை வெளியேற்றும் பணியினை கரும்புலிகளே மேற்கொண்டனர். அதிகாலை 04.15 மணியளவில் அந்த அணியினரும் ஊடறுத்து சென்றனர்.கரும்புலிகளின் தியகத்தினாலே அந்த அணியினர் நகர்வினை தொடர்ந்தனர்.தாக்குதலிலே பல கரும்புலி வீரர்கள் விழி மூடினர்.காயப்பட்டவர்களையும், வீரசாவு அடைந்தவர்களையும் எடுக்க முடியாத நிலைமையிலே பணிகள் தொடர்ந்தவண்ணம் இருக்கும் நிர்ப்பந்தம்.

காவியமான கரிய வேங்கைகளின் நினைவுகளே காலம் எல்லாம் எங்கள் கண்களிலே. பலதோழர்கலினை அன்று இழந்தோம். சிலர் இன்னும் உயிரோடும் இருக்கலாம். அவர்களையும் இன் நாளிலே மனதில் நினைக்கின்றேன். கனவுகளுடனே கரும்புலியாகிய வீரர்களே உங்களின் கனவும் ஒரு நாள் நனவாகும் இது உறுதி……….

கரும்புலி

(www.eelamalar.com)