கிட்டு ஒரு தனிமனித 
…….சரித்திரம் ……

தை பிறந்தால் வழி
பிறக்குமென்பர் 
தமிழினத்துக்கோ 
வலியது சுமப்பதுதான் 
விதியதோ தை 16
தருவது வங்க கடலில் 
காவியமாகிய பதின்மரின் 
தியாகமே!! தியாகத்தில் 
காவியம் எழுதிய 
கேணல் கிட்டு

கிட்டு- பொன் எழுத்தில் 
பொறிக்கப்பட்ட சரித்திரம்!
கிட்டு- ஒரு வாசிக்கப் பட 
வேண்டிய அகராதி!
கிட்டு- சிங்களப் படைக்கு
சிம்மசொப்பனம்!
கிட்டு- தளராத துணிவு!

கிட்டு- ஒரு ஓயாத அலை!
கிட்டு- சமர்க்களத்தில் 
சுழன்று அடிக்கும் புயல் !
கிட்டு- பன்முக ஆற்றல் 
படைத்த வீரத் தளபதி
கிட்டு- எரிமலையாய்
வெடித்துக் கிளம்பிய
அண்ணனின் தம்பி! 
தங்கத் தலைவனின்
பாசத்தம்பி கேணல் 
கிட்டு-!!

கிட்டு பெயர் 
கேட்டு கிலி கொள்ளும் 
சிங்களபேரினம் …/
இன்று ம் தொடரும் 
துரோகமே அன்றும் 
செய்தது வல்லரசு../ 
எழுதாத விதியில்
விதி எழுதி..
வங்க கடலில் வரலாறு
படைத்த பதின்மரும் .
தன்மானம் காத்து 
தன்னலமற்ற தியாகதால்
காவியமாகிய
தியாகசீலர்ககளை

தமிழினம் உள்ளவரை
வணங்க வேண்டிய 
மாவீரர்கள்!! இன்றைய 
இந்நினைவுநாள் சுமந்து 
தலை சாய்ந்த வீர வணக்கங்கள்!!

தமிழ்மகள் பரா ..16,01.18