Fotor0115185512

மரணித்துப்போன
மனிதப் பிறப்பல்ல

கிட்டண்ணா……
கிட்டு
உன் பெயர் சொன்னபோதே
சட்டென வாயெடுத்து
மாமா என்று சொல்லும்-உன்
இறப்பின் பின்
பிறப்பெடுத்த மழலைகளும்.
நீ
மரணித்துப்போன
மனித பிறப்பல்ல,
மண்டியிடாத மனிதராய்
விடுதலை வாழ்வை
வாழ கற்றுக்கொடுத்த
வரலாற்று பிறப்பு.
வரலாறுகளை வாரி வாரி
கற்றுக்கொண்டாய்-உன்
வாழ்வை எமக்கு வரலாறாய்
வழி காட்டிவிட்டாய்.
எங்கள் விடுதலை போருக்கு
நீ
ஒற்றை பனைமரம்.
காற்றை கிழித்த சன்னங்கள் சொல்லும்-உன்
களங்களின் வீரத்தை,
கழுத்தில் தொங்கிய
புகைப்பட கருவி சொல்லும்-உன்
கலைகளின் காவியத்தை,
போரியல் மரபுகளுள்
போராடிய போர்மகனே
எதிரி சொல்வான்-உன்
அன்பான அரவணைப்பை,
கிட்டண்ணா கிட்டண்ணா
என்று சொல்லி
கட்டப்பொம்மனையே மறந்து போனோம்,
மண்டியிடாத கட்டாப்பொம்மனின்
மறு பிறப்பா நீ?
தேசம் தேடி வந்த உன்னை
நாசம் செய்தது இந்தியா,
மீண்டும் ஒருதரம்
காந்திய தேசத்தின்
வேஷம் கலைந்தது-உன்
குருதி சிந்தியே,
கடலோடு-நீ
கரைந்து போனாய்-எங்கள்
இதயத்தில் வரலாறு ஆனாய்.

eelamalar.com_