கிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது.

images (21)

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் வைத்தே சந்தேக நபரை  11/01/2016 இரவு மன்னார் மாவட்ட விசேட போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மன்னார் மாவட்ட விசேட போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த நபரை, கைது செய்ய முற்பட்டனர்.

இதன்போது, குறித்த சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கிளிநொச்சிப் பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது