கேணல் கிட்டு உட்பட 9 மாவீரர்களின் 25 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு –பிரித்தானியா

1993 தை மாதம் 16ம் திகதி இந்திய அரசின் கோரப்பசிக்கு இரையாகி வீரச்சாவடைந்த தளபதி கிட்டு லெப்.கேணல் குட்டிசிறி, மேஜர் வேலன், கப்டன் குணசீலன், கப்டன் றொசன், கப்டன் ஜீவா, கப்டன் நாயகன், லெப்டினன் அமுதன், லெப்டினன் தூயவன், லெப்டினன் நல்லவன் ஆகியோரின் 25ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் 22.01.2018 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில் உள்ள சட்டன்(Sutton) நகரில் பிரித்தானய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பித்த இந்நிகழ்வில் பொதுச்சுடரினை வூப்பெற்றால் நகரச் செயற்பாட்டாளர் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியினை மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவர் ஏற்றிவைத்தார். ஈகைச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பித்த வணக்க நிகழ்வில் வருகை தந்திருந்த மக்கள் கேணல் கிட்டு உட்பட 9 வேங்கைகளின் திருவுருவப் படங்களுக்கு மலர் வணக்கம் சுடர் வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து நடைபெற்ற எழுச்சி நிகழ்வுகளில் கலைபண்பாட்டுக்கழக நடன ஆசிரியர்களின் மாணவர்கள் எழுச்சி நடனங்கள், கவிதைகள், எழுச்சிப் பாடல்கள் போன்ற நிழ்வுகள் இடம்பெற்றன.

தேசியக் கொடி இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தது.