16.05.2009 அன்று முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிய கேணல் சங்கீதன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் – 16.05.2020

■வெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் கேணல் சங்கீதன் .!

உளவுத்தலமைக்கு கடைசிவரை மதி உரை (உறுதி) கொடுத்து உயர்ந்தவனே உயிர்போகும் இறுதிவரையும் உயர் இரகசியங்களை தன்னகத்தே காத்தவனே.!

வெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் இவனே.! தேடித் தேடித் தான் படித்து தேர்ந்தெடுத்து பலரை வளர்த்து விட்ட வித்தகனே.!

எதிர்காலத்தை நிகழ்காலத்தில் கணித்து மதிப்பீடுகளை மனம் கோணாது முன்வைத்த விவேகனே.!

ஈழப்போரின் கடசிக்களம்வரையும் ஈகம் ஒன்றை தவிர வேறொன்றையும் தேர்ந்தெடுக்காத புனிதனே விழுப்புண் ஏற்றபோதும்.!

விசாரணையில் சூட்சுமம் அவிழ்த்து விசமிகள் வேரறுத்த வீரனிவன் கற்றுக் கற்பித்து கணித்தவற்றை.!

இவன் கிளைகளாய் இருந்து அமைகின்ற ஈழண்பர்கள் ஈழத்தில் இவன் எண்ணத்திற்கு செயல் கொடுப்போம்.!

அதுவரை :எங்கெங்கும் எம் தேசத்திற்காய் பணிபுரியும் நண்பர்கள்

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”