கைதுசெய்யப்பட்ட ஜெயசிங்கவுக்கு ஆதரவாக வாதிட ஒவ்வொரு காவல்நிலையங்களிலிருந்தும் 25,000 அறவீடு!

புங்குடு தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப் பாலியல் வன்முறையின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான வடமாகாணத்தின் முன்னாள் பிரதிக் காவல்துறைமா அதிபர் ஜெயசிங்கவிற்கு ஆதரவாக வாதிடுவதற்கு ஒவ்வொரு காவல்நிலையங்களிலிருந்தும் 25,000 ரூபாஅறவிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

நீதிபதி இளஞ்செழியன் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறு குற்றச் செயலுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவருக்கு ஆதரவாக வாதாட காவல்துறை பணம் சேர்ப்பது பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளதாகவும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த முன்னாள் காவல்துறைமா அதிபரிடம் மேற்கொள்ளும் விசாரணையிலிருந்துதான் இதில் அரசியல்வாதிகள் தலைப்பட்டிருக்கின்றார்களா? எனக் கண்டறியமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அப்படி இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வழக்கை திசைதிருப்புதவற்காக பாதாள உலகக் கும்பலை பயன்படுத்தியிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.