கோத்தாபய இராணுவ முகாமை விடுவித்தால் அங்கு எலும்புத் துண்டுகள் வெளிவரக்கூடும் – சீமான்!

கோத்தாபய இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை வர்த்தமானி அறிவித்தல் மூலம் அபகரிக்கும் நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், இறுதி யுத்தம் நடைபெற்ற இப்பகுதி மர்மம் நிறைந்த பகுதியாக இருக்கலாம் என பல தரப்பினர்களும் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இது தொடர்பில் நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அப்பிரதேசத்தை மக்களின் பாவனைக்கு விடுவித்தால் மக்கள் தமது தேவைகளுக்காக நிலத்தினைக் கிண்டும்போது எலும்புக் கூடுகள் மிதக்க வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மக்கள் அனைவரும் இப்பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம். இதன் காரணமாக இன்னும் பல இரகசியங்கள் வெளிக்கிளம்ப சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.