பூண்டுலோயா சந்தேகநபர் கைது 

05

நுவரெலியா,பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் அக்கர மலை பிரிவு தோட்டத்தில் தாயும் மகளும் கொலை செய்யபட்டுள்ள சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஒருவரை இன்று காலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை, அக்கரமலை பிரதேசத்தில் வைத்தே சந்தேகநபரை கைது செய்துள்ளதாகவும் சந்தேகநபர், கொலைச்செய்யப்பட்ட தாயின் மூத்த மகன் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கொலைகளை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் சந்தேகநபர் உடுத்தியிருந்த ஆடைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரை, நாவலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் இன்று 21 ஆம் திகதி ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.   சம்பவத்தில் ஆண்டி பேச்சாய்  (52) மற்றும் அவரது மகள் பெரியசாமி நித்தியகல்யாணி (32) ஆகிய இருவருமே கொலை செய்யப்பட்டுள்ளனர்.