சமர்க்களங்களின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்…!

“ருசிகர சம்பவம்”

அப்போது ஆனையிறவு படைத்தளம் மீதான இருவழித்தாக்குத்தல் நடைபெற்றுக்கொண்டிருந்தது.ஆனையிறவு படைத்தளம் புலிகளால் நினைத்துக்கூட பார்க்க முடியாது என உலக இராணுவ வல்லுனர்களால் கருதப்பட்ட தளம். அதனுடைய இயற்கை கட்டமைப்பு அவ்வாறானது.

ஆனையிறவு படைத்தளம் தாக்கப்பட தயாராகிறது. தளபதியாக கேணல் பால்ராஜ் நியமிக்கப்படுகிறார். குடாறப்பு தரையிறக்கம் தளபதி சூசையின் கடற்புலிகள் பிரிவால் செய்துமுடிக்கப்படுகிறது. போர் நினைத்துப்பார்க்க முடியாத அளவு உக்கிரமாக நடக்கிறது. இறுதியில் உலகமே வாயில்ப்கை வைக்கும் படி ஆனையிறவு தளம் புலிகள் வசம் ஆகிறது. தமிழீழம் எங்கும் வெற்றிக்கொண்டாட்டம்.

தலைவர் எல்லா உப தளபதிகளுக்கும் வாழ்த்து கூறுகிறார். பால்ராஜ் க்கு ஒரு செய்தியுமே கூறவில்லை. சில்நாட்களில் தேசியத்தலைவரை சந்திக்கிறார் பால்ராஜ். இருவரும் உரையாடிக்கொண்டிருக்கும் போது தலைவர் திடீரென என்ன உம்மைப்பற்றி தலைவர் ஒன்னுமே பெருமையாக சொல்லேல என்டு யோசிக்கிறீரோ. என கேட்கிறார். பால்ராஜ் புன்னகைத்தபடி தலையை குனிகிறார். ஒரே அமைதி.

தலைவர் உடனே ஒரு ரேடியோவை கையில் கொடுத்து இதைக்கேளும் என சொல்கிறார். பால்ராஜ்ஜும் ஆவலாக வாங்கி கேட்கிறார். அதில் சிறீ லங்கா இராணுவத்தளபதிகள் இருவர் Walkie-talkie இல் பேசிய குரல் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தது… அவர்கள் வாக்கி டாக்கியில் பேசும் போது புலிகளின் புலனாய்வுப்பிரிவு அதை ரகசியமாக ஊடறுத்து ஒலிப்பதிவு செய்தது…

அந்த ஒலிநாடாவில் ஒரு அதிகாரி பின்வருமாறு மற்றைய அதிகாரியிடம் வினவுகிறார். “ஆனையிறவு நிலவரம் என்ன??,. புலிகளின் தாக்குதலை சமாளிக்க மேலதிக இராணுவம் தேவையா என வினவுகிறார். அதற்கு பதிலளித்த இராணுவ அதிகாரி ஆனையிறவு நிலவரம் மோசமாகத்தான் உள்ளது.. பிரபாகரன் வந்து இருந்தால் கூட ஓரளவு சமாளிக்கக்கூடியதாய் இருந்திருக்கும். ஆனால் வந்திருப்பது புலிகளின் கட்டளைத்தளபதி பால்ராஜ்.. அவன் தலைமையிலான சார்ள்ஸ் அன்ரனி படையை வீழ்த்துவது அவ்வளவு சுலபமல்ல. ஆக மேலதிக வீரர்களும் கவச வாகனங்களும் அதிகளவில் தேவை என்பதாக அந்த உரையாடல் இருந்தது….. அதனை கேட்ட பால்ராஜ் சத்தமாக சிரித்தார்…. தொடர்ந்து பிரபாகரன் கூறினார்… இதை விட உமக்கு பாராட்டு தேவையா ??. அதனால்தான் உம்மை நான் பாராட்ட வில்லை என சிரித்த படி கூறினார்….

தன்னிகரல்லாத தளபதி பிரிகேடியர் பால்ராஜ்….