இலங்கையில் சமஷ்டி உறுதி என்கிறார் மங்கள?

09-10-07இலங்கைக்குள்  சமஷ்டி முறைக்கு கதவு திறக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் இலங்கை சமூகத்தினர் மத்தியில் பேசும் போது அவர் இதனை கூறியுள்ளார். சமஷ்டி முறையிலான தீர்வுக்கு கதவு திறக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை வெளிவிவகார அமைச்சர் முதல் முறையாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இச்சந்தர்ப்பத்தினை தமிழ் மக்கள் எவ்வாறு பயன்ப்படுத்திக்கொள்ளப்போகின்றார்கள் என்பதனை பொருத்திருந்து பார்ப்போம்…

(www.eelamalar.com)