சம்­பந்­தனும் ரணிலுமே நாட்­டை ஆள்­கின்­றனர்.!

ஜனா­தி­ப­தியை விடவும் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  ஆகி­யோ­ருக்கே அதி­கா­ரங்கள் உள்­ளது. நாட்­டினை பி­ள­வு­ப­டுத்தும் அர­சியல் அமைப்­பினை உரு­வாக்­கு­வதில் இவர்­களே முன்­னின்று செயற்­பட்­டு ­வ­ரு­வ­தாக ரியல் அட்­மிரல் சரத் வீர­சே­கர  தெரி­வித்தார். இவர்­களின் சகல முயற்­சி­க­ளையும் தோற்­க­டித்து நாட்டை காப்­பாற்ற மக்­களை ஒன்­றி­ணைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

தேசிய மக்கள் சபையின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கொழும்பில் இடம்­பெற்ற நிலையில் அதில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்கும் போதே அவர் இதனை குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

ரியல் அட்­மிரல் சரத் வீர­சே­கர  செய்­தி­யாளர் சந்­திப்பில் கருத்து தெரி­விக்­கையில்,

யுத்த குற்றம் எழ கார­ணமே தருஸ்மான் அறிக்கை தான். இறுதி யுத்­தத்தை 40 ஆயிரம் பொது­மக்­களை கொன்­ற­தாக தெரிவித்­த­மையே பிரச்­சி­னைகள் உரு­வாக கார­ண­மாகும். யுத்­தத்தில் ஈடு­பட்ட முக்­கிய இரா­ணுவ அதி­கா­ரிகள் அனை­வ­ருக்கும் சர்­வ­தேச நாடு­க­ளுக்கு செல்ல முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. அவர்­களின் கட­வுச்­சீட்­டுகள் முடக்­கப்­பட்­டுள்­ளன. எமக்கு சார்­பான எந்­த­வொரு அறிக்­கை­யையும் அர­சாங்கம் ஜெனி­வாவில் சமர்ப்­பிக்­க­வில்லை. இவற்றை சமர்ப்­பித்­தி­ருந்தால் எமக்கு எதி­ரான அழுத்­தங்கள் எழுந்­தி­ருக்­கப் போ­வ­தில்லை. ஆகவே அர­சாங்­கமே  திட்­ட­மிட்டு இந்த மோச­டி­களை செய்து வரு­கின்­றது. ஜனா­தி­ப­தி­யையும் பிரச்­சி­னை­களில் சிக்­க ­வைக்கும் முயற்­சி­களும் இதன் பின்­ன­ணியில் உள்­ளது. ஆகவே ஜனா­தி­பதி மிகத்­ தெ­ளி­வாக தீர்­மானம் எடுக்க வேண்டும்.

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  ஆகி­யோரே இன்று புதிய அர­சியல் அமைப்­பினை உரு­வாக்க முயற்­சித்து வரு­கின்­றனர், ஜனா­தி­ப­தியை விடவும், சம்­பந்­த­னுக்கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவுக்­குமே இன்று அதி­காரம் உள்­ளது. அவர்கள் நினைப்­பதே இன்று இடம்­பெற்று வரு­கின்­றது. சம்­பந்தன் ஒரு நடு­நி­லை­வா­தி­யா­கவும், நாட்­டினை நேசிப்­ப­தா­கவும் இவர்கள் கூறு­கின்­றனர். இவர்கள் அனை­வரும் நாட்­டினை பிரிக்க ஆரம்­பத்தில் இருந்து செயற்­பட்டு வந்­ததை இவர்கள் மறந்­து­விட்டு கருத்து கூறு­கின்­றனர்.

புதிய அர­சியல் அமைப்­பினை உரு­வாக்­கு­வதில் அர­சாங்கம் ஒரு அடி பின்­வாங்­கி­யுள்­ள­தாக தெரி­கின்­றது. காணாமல் போனோர் காரி­யா­லயம் உரு­வாக்­கிய போதும், சர்­வ­தேச அழுத்தம் ஏற்­படும் போதும் அர­சாங்கம் செயற்­பட்­ட­தை­போல அல்­லாது சற்று மாற்று விதத்தில் சதி­களை கொண்டு செயற்­பட்டு வரு­வ­தாக தெரி­கின்­றது. அர­சியல் அமைப்பு குறித்து அர­சாங்­கத்தில் பல்­வேறு கருத்­துக்கள் முரண்­பா­டுகள் உள்­ளன. அதேபோல் சிவில் அமைப்­புகள், மாநா­யக்க தேரர்கள் அனை­வரும் எதிர்ப்பை தெரி­வித்­துள்ள நிலையில் அர­சாங்கம் ஒரு அடி பின்­வாங்­கி­யுள்­ள­தாக தெரி­கின்­றது. இந்த அர­சாங்­கத்தை உரு­வாக்­கிய சர்­வ­தேச சக்­திகள், இர­க­சிய அமைப்­புகள், புலம்­பெயர் அமைப்­புகள் தமது நிலைப்­பாட்டில் இருந்து மாறு­வார்கள் என எதிர்­பார்க்க முடி­யாது. பிரி­வி­னை­வாத சக்­திகள் தொடர்ந்தும் தமது தேவை­களை நிறை­வேற்ற எந்த வகை­யி­லேனும் முயற்­சிக்கும் என்­பதில் சந்­தேகம் இல்லை. சட்­டத்­துக்கு முர­ணா­கவோ  மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை வைத்­து­கொண்டோ ஏதேனும் ஒரு வகையில் அர­சியல் அமைப்பு கொண்­டு­வ­ரப்­படும். முழு­மை­யாக மாற்றம் செய்­யா­விட்­ட லும் அதி­காரப் பகிர்வு, மாகா­ண­சபை பலத்தை அதி­க­ரிக்கும், நாட்­டினை துண்­டாடும் ஏதேனும் திட்­டங்­களை கொண்­டு­வ­ரு­வார்கள் என்­பதில் சந்­தேகம் இல்லை. இப்­போது ஏற்­பட்­டுள்ள எதிர்ப்பை கவ­னத்தில் கொண்டு கண்­கட்டி வித்­தையை செய்­தேனும் புலம்­பெயர் அமைப்­பு­க­ளுக்கும் பிரி­வி­னை­வாத சக்­தி­க­ளுக்கும் ஏற்ற தீர்­மானம் ஒன்று கொண்­டு­வ­ரப்­படும். எனவே இவர்­களின் சகல முயற்­சி­க­ளையும் தோற்­க­டித்து நாட்­டினை காப்­பாற்ற மக்­களின் ஒன்­றி­ணைக்க வேண்டும். மக்கள் உண்­மை­களை புரிந்­து­ கொண்ட ஒன்­றி­ணைய வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

தேசிய ஒருங்­கி­ணைப்பு ஒன்­றி­யத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர செய்­தி­யாளர் சந்­திப்பில் கருத்து தெரி­விக்­கையில்,

நாட்­டினை துண்­டாடும் வகை­யிலும் வடக்கு கிழக்கை தமது ஆக்­கி­ர­மிப்பில் வைத்­து­ கொண்டு மீண்டும் புலி­களை உரு­வாக்­கவே புதிய அர­சியல் அமைப்­பினை உரு­வாக்க சர்­வ­தேச சக்­திகள் முயற்­சித்து வரு­கின்­றது. அதற்­கா­கவே இரா­ணுவ குற்­றங்கள் செய்­த­தா­கவும், 40 ஆயிரம் பொது­மக்­களை கொலை செய்­த­தா­கவும் கூறி எம்­மீது குற்றம் சுமத்­தியும், வடக்கு கிழக்கு பகு­தி­களில் அதி­கா­ரங்­களை உச்ச அளவில் பகி­ரப்­பட வேண்டும் எனவும் கூறிக் ­கொண்டு அழுத்தம் கொடுத்து வரு­கின்­றனர். இந்த அர­சாங்­கமும் சர்­வ­தே­சமும்  கூறும் கார­ணி­களை ஏற்­று­க்கொள்ளும் வகை­யி­லேயே செயற்­பட்டு வரு­கின்­றதே தவிர இலங்­கையின் இரா­ணு­வத்தை பாது­காக்­கவோ நாட்­டினை ஐக்­கி­யப்­ப­டுத்­தவோ முயற்­சிக்­க­வில்லை என்­பது தெளி­வாக தெரி­கின்­றது.  இந்த அர­சியல் அமைப்பு உரு­வாக கார­ணமே யுத்த குற்­றச்­சாட்டு தான். யுத்த குற்றத்தை கூறி அதன் மூலமாக நாட்டினை பிரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே புதிய அரசியல் அமைப்பு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து செயற்பட்டு வருகின்றனர். மேற்கு நாடுகளுக்கு என்ன தேவை உள்ளதோ அதே நிலைப்பாட்டில் தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றார். இந்த நாட்டினை பிரிக்க வேண்டும் என்றே நினைக்கின்றனர். மைத்திரி – ரணில் கூட்டணி ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டதே நாட்டினை துண்டாட வேண்டும் என்ற பிரதான காரணத்தை கொண்டேயாகும் எனவும் குறிப்பிட்டார்.