சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தன்று லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் -நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தை முன்னிட்டு, பல பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டங்கள்!

இலங்கையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தை முன்னிட்டு மன்னார், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இணைந்து தாயகத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்களை வடக்கில் வவுனியா-ஓமந்தையிலும், கிழக்கில் மடக்களப்பு-கல்முனையிலும் ஒழுங்கு செய்தனர். அப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு வழங்கினர்.

அதைப்போன்று பிரித்தானியாவில் லண்டன் நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இந்த போராட்டம் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமான இன்றய தினம் (30/08/2019) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த, நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.