சிங்கப்பூரில் சிகிச்சை பெற முயற்சிக்கும் எவன்காட் தலைவர்!

19-10-14வெளிநாட்டுக்கு செல்ல அனுமதி கோரி எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி முன்வைத்த கோரிக்கை குறித்து, விளக்கமளிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நிஸ்ஸங்க சேனாதிபதி வைத்திய சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் செல்ல வேண்டியுள்ளதாக, அவரது சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். எனவே தற்போது அவரது வௌிநாட்டுப் பயணங்களுக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தடையை தற்காலிகமாக நீக்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரினார். எனினும் இதற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் கருத்தும் அவசியம் என, கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் 20ம் திகதி இந்த விடயம் குறித்து விளக்கமளிக்குமாறு குறித்த ஆணைக்குழுவுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

(www.eelamalar.com)