சிங்களம் இராணுவ மரியாதை செலுத்திய ஒரு கரும்புலி வீரன்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடை நீக்கிகளான கரும்புலிகளின் ஈகம் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாவை. தமிழீழ தேசியத் தலைரால் மிக உயர்ந்த. இடத்தில் வைத்து நேசிக்கப்பட்டவர்கள் கரும்புலிகள். இந்த கரும்புலிகள் சிங்கள இராணுத்துடன் உயிருடன் பிடிபடுவதில்லை.சுய நினைவை இளந்த நிலையில் ஓரிரு கரும்புலிகள் சிறிலங்காப் படைகளிடம் பிடிபட்டதுண்டு.இவ்வாற நிலையில்தான் ஒரு கரும்புலி மாவீரன்.படுகாயத்துடன் நினைவிழந்த நிலையில் இராணுவத்தினரால் பிடிபட்டுவிட்டான்.

கரும்புலி ஒருவரை முதற்தடைவையாக உயிருடன் பிடித்ததிமிருடனும்.மிகப்பெரிய பெருமையுடனும் கொழும்பில் உள்ள இராணுவ மருத்தவ மனையில் அனுமதித்துவிட்டு .அவன் சுயநினைவுக்கு திரும்புவரை காநத்திருந்தது சிங்களம்.

இரண்டு நாள்கழித்து அந்த கரும்புலி வீரன் நினைவு திரும்பியுள்ளார். தன்னைச்சுற்றிலும் சிங்கள இராணுத்தினர் நிற்பதைக்கண்டவுன்தான் தான் இராணுவத்திடம் பிடிபட்டுவிட்டது அந்த கரும்புலி வீரனுக்கு புரிந்தது.சற்றும்கூட சிந்திக்கவில்லை.யாருமே எதிர்பார்க்காத வகையில் அந்த கரும்புலி வீரன்அதிடியாக எடுத்த முடிவு அங்கிருந்த படையினரை நிலைகுலைய வைத்துள்ளது. அதாவது தனது தலையை தான் படுத்திருந்த கட்டில் விளிம்பில் ஓங்கி அடித்துள்ளார். பலமாக அடித்த அந்த அடியினால் அவனது உயிர்அந்த இடத்திலியே பிரிந்தது. இந்த சம்வத்தை நேரில் பார்த்த செங்கலடியைச் சேர்ந்த மேஜர் பேரேரா என்ற சிங்கள இராணுவச் சிப்பாய் அங்கு நடந்ததை பின்நாட்களில் நினைவு கூர்ந்தார்.

“வரலாற்றிலிலேயே இல்லாத வகையில் ஒரு போர் வீரன், எதிரியிடம் சிக்கினோம் என்று தெரிந்தவுடன், தாம் எதற்க்காக சிக்கினோம் என்றுகூட அறியாமல், தனது நோக்கம் சாவு ஒன்றே என தற்கொலை செய்து கொண்டதை மிகப்பெருமையாக சொல்லி அனைத்து இராணுவ அதிகாரிகளும் தமது தொப்பிகளைக் கழட்டி அந்த கரும்புலி வீரனுக்கு சல்யூட் அடித்தது இராணுவ மரியாதை செய்ததாக குறிப்பிட்டார். அத்துடன் அந்த இராணுவ மரியாதை செலுத்தியவிடயத்தை அப்போதிருந்த அரசாங்கத்திற்கு தெரியாமல் மிக இரகசியமாக வைத்திருந்ததாகவும் “அவர் குறிப்பிட்டார்.
_மண்ணுறங்கும் எங்கள் கரும்புலிகளின் மாவீரம் _