சிங்கள படைகளின் போர்நிறுத்த ஒப்பந்தமீறல்… முகமாலை

போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி குறிப்பிட்டகாலம் மக்களால் நிறைந்து கலகலப்பாய் காணப்பட்டது முகமாலை.ஆனால் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும்போதே சிங்கள படைகள் முகமாலையை யுத்த பிரதேசமாக மாற்றிவிட்டிருந்தன.சமாதான வழிகளிலே நாங்கள் தீர்வை எட்ட விரும்புகின்றேம் என்று உலகத்துக்கு அறிவித்துவிட்டு அந்த சமாதான காலத்திலையே ஒரு வலிந்த தாக்குதலை முகமாலையில் எங்கள் மீது தொடுத்தது.சிங்களத்தின் இந்த சூட்சம திட்டங்களை நன்கறிந்த தலைவர் எங்கள் படைகளை சரியானமுறையில் எதிரியின் முகத்தில் அறைவதற்கு ஏற்றவகையில் தயார்படுத்தி வைத்திருந்தார்.

விடிகாலை முகமாலை நிலமெங்கும் எறிகனையின் அதிர்வுகள்.காலை 8.30 முகமாலை A9 பிரதான வீதியயை ஊடறுத்து எம்மவர்கள் அமைத்திருந்த தடுப்பரண்களில் சண்டை தொடங்குகின்றது.ஆணையிரவில் இருந்து பார்க்கும்போது A9 வீதியின் இடதுபுரம் இம்ரான் பாண்டியன் படையணியின் போராளிகள் தடுப்பரண்களில் நிலையெடுத்திருந்தார்கள்.எந்த அறிவிப்புமின்றி எங்கள் நிலைகள் மீது ஒரே செல்லடிகள் என்ன நடக்குதென்று போராளிகளுக்கு விளங்கவில்லை.அதற்குள் எங்களுடைய இரண்டாவது நிலைகளை ஊடறுத்து ஆமி நிலைகொன்றுவிட்டான்.ஆமியின் முழுமையாதொரு தயார்படுத்தலில் தொடங்கிய இந்த சமரில் 6000வரையிலான துருப்புகளையும்,டாங்கிகள்,துருப்புகாவிகள்,பவன் கவச வாகனங்கள்,உட்பட சிங்கள படையின் பலம்வாய்ந்த கவசப்படையையும் இத்தாக்குதலில் சிங்கள ஆமி பயன்படுத்தியிருந்தான்.டாங்கிகலிருந்து அடுத்தடுத்து எறிகனைகளை எவியபடி எங்கள் காப்பரண்களை நெருங்குகின்றான்.A9 வீதியை அன்மித்திருந்த பகுதியில் எமது போராளிகள் வசமிருந்த காப்பரண்கள் சில எதிரியிடம் வீழ்கின்றன.அங்கு ஊடுறுவிய படைகள் எங்களது நிலைகளில் இருந்தபடி பக்கவாட்டாக நிலைகொண்டிருந்த போராளிகளின் நிலைகள்மீது தாக்குதல்களை தொடங்குகின்றான்.

சற்றும் எதிர்பாராத இந்த இறுக்கமான சமரில் இழந்த எங்கள் நிலைகளை மீண்டும் எங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இம்ரான் பாண்டியன் படையணி போராளி அக்பர் அவர்களின் நெறிபடுத்தலில் எங்கள் அணிகள் மீள் ஒழுங்குபடுத்தபட்டு முறியடிப்பு தாக்குதலுக்கு தயாராகின்றன.போர்களத்தில் வெற்றி பெறுவது தனியே சுடுகலன்களின் பலத்தால் மட்டுமல்ல குலையாத மனவுறுதியும் அதனோடு சேர்ந்த தந்திரோபயங்களுமே வெற்றியை தீர்மாணிக்கும்.தலைவர் தந்த இந்த மனதிடமும் சிறந்த போரியல் தந்ரோபாயங்களும்தான் இறுக்கமான அந்த சூழ்நிலையில் எங்கள் நிலைகளிலிருந்து பின்வாங்காமல் போரிடும் வல்லமையை அன்று எங்கள் போரளிகளுக்கு கொடுத்தது.

அங்கிருந்த போராளிகள் மேலும் ஆமி முன்னேறி வரமுடியாதபடி கடுமையான முறியடிப்பு சமரை நிகழ்த்தி கொண்டிருந்தவேளையில் உதவி அணிகளும் வந்து சேர்ந்தன.காலை 8.30க்கு தொடங்கிய சண்டை வந்த வழிக்கே ஆமியை விரட்டியடித்து எங்கள் நிலைகளை நாங்கள் மீளவும் கைப்பற்றி 11மணியளவில் முடிகின்றது.இச்சமரில் 30,35வரையிலான படைகள் இழப்பினை சந்திதிருந்தனர்.எங்களுக்கு கப்டன் தமிழ்நிலவன்,லெப்டிப் தியாகராஜா ஆகிய இரண்டு போராளிகள் மட்டுமே வீரச்சாவு அடைந்திருந்தனர்.கிளாலி முதல் கண்டல்வரை நடந்த பெரும்சமரில் ஒரு பகுதி மட்டுமே இப்பதிவு.

சமதான காலம் புலிகள் சண்டைகளுக்குரிய ஒழுங்கு படுத்தலுடன் இருக்கமாட்டார்கள் எளிதில் வென்றுவிடலாம் என்று 6000 படைகளை திரட்டிகொண்டு வந்தவனுக்கு அத்தொகையில் கால்வாசிகூட இல்லாத புலிகள்படை எதிரியை வந்த வழிக்கே புறமுதுகிட்டு ஓட வைத்தது வரலாறு.

வரலாறு திரும்பி வராமலா போய்விடும்

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.
-பிரபாசெழியன்.