சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு!!

சிரியாவில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 9 நாட்களில் 700 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது.

இந்தியாவை போலவே சிரியாவும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தது. ஆனால் 1936ல் அந்த நாடு குடியரசாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 1950 வரை நிலையில்லாத ஆட்சிகள் நடந்து வந்தது. 1960 தொடக்கத்தில் அங்கு ஹபீஸ் அல் ஆசாத் ஆட்சி உருவானது. ஆசாத் கடும் அடக்குமுறையை கையாண்டார். ஆட்சிக்கு எதிரான கலகக்குரல்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டன.

சிரியாவில் 90 சதவிகித மக்கள் சன்னி பிரிவை சேர்ந்தவர்கள். ஆசாத்தோ ஷியா பிரிவை சேர்ந்தவர். அரசின் முக்கிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்புகளில் ஷியா மக்கள் இருந்தார்கள். அடுத்தகட்ட பொறுப்புகளில் சன்னி இனத்தினர் இருந்தனர். 1998இல் ஆசாத்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஆசாத்தின் மூத்த மகன் பஸால் ஆட்சியில் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஆனால் பதவி ஏற்க சில நாட்களுக்கு முன் பஸால் கார் விபத்தில் மரணம் அடைந்தார். ஆசாத் 2000ல் மரணம் அடைந்தார். மகன் பஷர் அல் ஆசாத் வசம் ஆட்சி வந்தது. படித்தவர் என்றாலும் அவருக்கு ஆட்சி குறித்து எதுவும் தெரியாது. இந்த நிலையில் சன்னி – ஷியா பிரச்னை உலகம் முழுவதும் பெரிய அளவில் உருவானது. இரண்டாம் கட்ட இடத்தில் இருந்த சன்னி அகற்றப்பட்டனர்.

பஷர் ஆசாத்தின் 18 ஆண்டு ஆட்சி முழுவதும் ரத்தக்களரியாகத்தான் உள்ளது. வேலை இல்லை. சரியான மருத்துவம் இல்லை. உணவு இல்லை. இதை எதிர்த்துதான் போர் தொடங்கியது.ரஷ்யா மற்றும் சில நாடுகள் அதிபருக்கு உதவியாகவும் துபாய் போன்ற நாடுகள் போராளி குழுக்களுக்கு உதவியாகவும் இருக்கிறது. இந்த போரில் இதுவரை 4,91,369 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். பஷர் அல் ஆசாத் பிறந்த ஊரில் இப்போது போர் உச்சத்தில் உள்ளது.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு குவாட்டாவில் கண்மூடித்தனமான தாக்குதலை அரசு நடத்தியுள்ளது. கடந்த 9 நாட்களாக நடந்து வரும் தாக்குதல்களில் இதுவரை சுமார் 700 பேர் உயிரிழந்துள்ளனர். ரசாயன தாக்குதலில் 170க்கும் மேற்பட்டவர்கள், குழந்தைகள் பலியாகியுள்ளனர். கட்டட இடிபாடுகளுக்கு அடியில் மறைந்து சிறுவர்கள் தங்களை காப்பாற்றக்கோரி கூக்குரலிடும் காட்சிகள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி கண்ணீரை வரவழைக்கின்றன. உலகம் முழுவதும் இருந்து கண்டனக்குரல்கள் எழுந்ததையடுத்து தினமும் 5 மணி நேர போர் நிறுத்தத்தை அமல்படுத்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். ஆனால் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை என ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது.