seeman

சீமான் உண்மையில் வன்னிக்கு போனாரா?

தமிழீழ விடுதலை போராட்டத்தில் போராளிகள் இணைந்தவுடன் அடிப்படை பயிற்சி நிறைவு செய்தபின் அவர்களது திறமைக்கு ஏற்றது போல ஒவ்வொரு துறைக்கும் பிரித்து அனுப்பப்படுவார்கள். அங்கு சென்றபின் சாதாரண போராளியாகவே இன்னொரு மூத்த போராளியின் கீழ் பணியில் அமர்த்தப்படுவார். அதில் இருந்தபடியே தனது பணியை திறம்பட செய்தால் அந்த துறையின் சகபோராளிகள் மத்தியில் இவர் இனம் காணப்படுவார். அதன் பின் இவரது பொறுப்பாளர்களின் கவனத்தை பெறுவார். தொடர்ந்து அவர் தனது சிறப்பான பணியை வெளிக்காட்டும் போது தான் அந்த துறைக்கான தளபதியின் கவனத்தை ஈர்ப்பார்.

மேலும் மேலும் தனது திறமையை வளர்க்கும் போது தான், தலைவரின் கவனத்தை பெற முடியும். இதே போல தலைவரின் கவனத்தை பெற்று சிறு வயதிலேயே அசாத்திய திறமையினால் மட்டு, அம்பாறை மாவட்ட தளபதியாக (கருணாவுக்கு அடுத்த நிலையில் ) விடப்பட்ட தளபதி லெப்.கேணல். ஜோயை கூற முடியும். 19வயதில் ஜோயை கிழக்கு தளபதியாக அண்ணன் நியமித்ததற்கு முக்கிய காரணம் சிறப்பு திறமையே. ஆனால் இந்தியாவில் பயிற்சி எடுத்த பல போராளிகள் சாதாரண பணியில் பலர் இருந்தனர். இதில் இருந்து ஒன்றை புரிந்து கொள்ள முடியும் திறமைக்கு மட்டுமே புலிகளமைப்பில் முன்னுரிமை வழங்கப்படும். அது பழைய போராளியாக இருந்தாலும் சரி புதிய போராளியாக இருந்தாலும் சரி அல்லது சீமானாக இருந்தாலும் சரி திறமையின் படியே பொறுப்புகள் வழங்கப்பட்டன. சரி…

சீமான் வன்னி சென்றாரா? தலைவரை சந்தித்தாரா?
******************************************
இந்த கேள்விகளுக்கு முகநூல் போராளிகள் தங்களது விருப்பத்திற்கு (பக்கத்தில நின்று வந்தவை போல) பல ஆய்வுகளை மேற்கொள்ளினம். இந்த போராட்டத்திற்கும் அவைக்கும் சம்பந்தமே இருக்காது. அல்லது 2009 வரை எல்லாத்தையும் மூடிக்கொண்டிருந்த, ஆரம்பத்தில் இயக்கம் கலைத்துவிட்ட, இயக்கத்தை விட்டு சண்டைக்கு பயந்து இயக்கத்தை விட்டு ஓடிவந்தவை, அல்லது பேருக்கு ஒரு டம்மி பீசா சுத்தி திரிஞ்சதுகள் தான். இப்போது நாங்கள் பழைய போராளிகள் எங்களுக்கு “கனக்க தெரியுமென்று அவையளே” தங்களை, தாங்களே சொல்லிக்கொண்டு முகனூலிலை திரியினம்.

அவை சொல்லுற ஒரு விளக்கம் வைகோபால்சாமி நாய்டு மட்டும் தான் புலிகளின் ஆதரவாளராம். உண்மையில் இதை கூறுபவர்களுக்கு முள்ளிவாய்காலில் கடைசியில் நடந்தது தெரியாது. நானும் ஒத்துக் கொள்ளுறன் வைகோபால்சாமி நாய்டு எங்களுக்கு எல்லா தீமைகளையும் செய்தார். அதை என்றைக்கும் ஈழத்தமிழர் மறக்க மாட்டினம். அனால் அவர் மட்டுமா தமிழினத்தை அழித்தார் என்றால் இல்லை.

தமிழ் நாட்டில் புலிகளுக்கு உதவினவர்களின் பட்டியல் மிகவும் நீளமானது. அவர்களையும் நாங்கள் மறக்கேல்லை. அவர்கள் தங்களை விளம்பரப்படுத்தவும் இல்லை. சீமான் வன்னி வந்ததும் உண்மை. நடேசண்ணை, ரஞ்சித்தண்ணை போன்றவர்களுடன் திரிந்ததும் உண்மை. இது அந்த நேரத்தில் அங்கு இருந்த போராளிகளுக்கு தெரியும். அப்படி இதை யாரவது, தானும் போராளி என்ற அடையாளத்துடன் மறுப்பானாகில் அவன் அந்த நேரத்தில் அங்கு இருக்காத ஒரு பொய்யன் அல்லது புளுகன், தயவுசெய்து இவர்கள் போன்றவர்களை நம்ப வேண்டாம்.

தலைவரின் சூட்டு பயிற்சி.!
***********************
இதில் என்ன வேடிக்கை உள்ளது ? நெடுமாறன் ஐயா, ராமகிட்டிணன் அண்ணை, கொளத்தூர் மணியண்ணை போன்றவர்கள் வந்தபோது இவர்களுக்கும் அண்ணை துப்பாக்கியை சுடுவதற்கு கற்பித்தார். அவர்களுடன் நேரத்தை செலவழித்தார். அது போலவே இதுவும். அது தலைவரின் தனித்துவமான ஒரு செயல்பாடு. இதனால் அந்த தலைவர்களுக்கு எங்கள் போராட்டத்தின் மீது ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும். இது ஒரு உளவியல் போர் முறை. இதை தான் பின்னைய நாட்களில் பொது பாடசாலை சிறுவர் தொடங்கி முதியவர் வரை ஆயுதங்களை அவர்கள் கையாள அனுமதிக்கப்பட்டது.

அது போலாவே திரு.சீமானுக்கும் வழங்கப்பட்டது. தலைவரின் நிழல் கடாபி அண்ணை என்பது உலகத்துக்கே தெரியும். அவர் இல்லாது அண்ணை எங்கும் செல்வதில்லை. அந்த இடத்தில் அவர் நின்றதும் வியப்பில்லை. பயிற்சி கொடுத்ததிலும் வியப்பில்லை.

அடுத்தது தலைவருடன் நிற்கும் புகைப்படம்
*************************************
பொய்யென்பது சில முட்டாள்களின் கருத்து.
*************************************
அந்த படத்தை பார்க்கும் போது தெரியவில்லையாட உங்களுக்கு?
அந்த படத்தை எடுக்கும் போது நின்ற போராளிகள் இப்போதும் சாட்சியாக இருக்கின்றார்கள். அண்ணையுடன் திரு.சீமான் சில நிமிடங்களே செலவழித்தார் என்பதும் வடி கட்டிய பொய்யே. தலைவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவருக்கு கொடுக்கப்பட்ட பணி பற்றி அடிக்கடி கூப்பிட்டு உரையாற்றுவார். அதற்கும் பல போராளிகள் (நான் குறிப்பிடுவது உண்மையான, கடைசிவரை முள்ளிவாய்காலில் நின்று வந்த போராளிகள்) சாட்சிகளாக இருக்கின்றார்கள்.

அடுத்தது சூசை (SO)அண்ணையின் இறுதி உரையாடல் பொய்யா?
******************************************************
சூசை (SO)அண்ணை அவரது மரணத்திற்கு இறுதி நாளில் சந்தோசுடன் உரையாடிய ஒலி நாடா. இதையும் போலி என்று சில பக்கியல் சொல்லினம். அப்படி சொல்பவர்கள் ஒன்றில் அமைப்பில் உண்மையாக இருக்காதவர்களாக இருக்க முடியாது. அல்லது இருந்தும் SOஅண்ணையை பார்த்தோ அல்லது அவரது குரலை கேட்காதவர்களாகத்தான் இருக்க முடியும்.! சூசை அண்ணை ஏன் இதற்கு முன் உதவிய பழைய தமிழ்நாட்டுதலைவர்களை விட்டுவிட்டு “சீமானிடம் சொல்லு அவரை நம்பித்தான் விட்டுவிட்டு போகின்றோம்” என்று கூறினார்? ஏன் இதை உங்களால் நம்ப முடியாமல் போனது?

காரணம் எங்களுக்கு தெரிந்த ஈழ அபிமானிகள் அண்ணன் வைகோபால்சாமி நாய்டு, ஐயா ராமதாசு, அண்ணன் திருமாவளவன், நெடுமாறன் ஐயா போன்றவர்கள் மட்டுமே இருந்தனர். இறுதியில் தான் சீமான் உள்வாங்கப்பட்டார். அவரது விடாத ஓர்மமும், தமிழ் தேசியத்தின் மீதான பற்றுடன் கூடிய செய்யல்பாடு தலைவரை மிகவும் கவர்ந்திருந்தது. “நான் மேலே கூறி இருந்தேன் புலிகளமைப்பில் வேகம், விவேகத்துடன், கூடிய திறமைக்கு தான் முதலிடம். அது திரு சீமானிடம் இருந்தது”.

மற்றைய தலைவர்கள் எமக்கு ஆதரவாக புலிகளமைப்பு ஆரம்பித்த காலத்திலிருந்து இருந்த போதும் அவர்களால் எமது போராட்டத்திற்கு சார்பாக எதுவும் சாதிக்க முடியவில்லை.1991இன் பின் அவர்களால் குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு எமக்கு பலம் சேர்க்க முடியவில்லை. அவர்களுக்கு அவர்களின் கட்சியையும் பாதுகாப்பதே பிரதானமாக இருந்தது. அதன்பின் தான் எமக்கு உதவ முடிந்தது. அதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன. எமது அனுதாபியாக இருந்தவர்கள் ராஜீவ் காந்தியின் (அரசியல் காரணங்களுக்காக பின்னால் சொருகப்பட்டது, அவரின் தந்தை பெயர் பெரோசு ஜகாங்கீர் கண்டி) மரணத்தின் பின் எமக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்குமளவுக்கு அரசியல் அழுத்தங்களை தாங்க முடியாத நிலையிலேயே அவர்கள் இருந்தனர்.

அன்றைய நேரத்தில் இப்படியான சம்பவங்கள் தலைவரை மனவருத்தத்திற்கு ஆளாக்கின. இதே அரசியல் அழுத்தங்களுக்கு பயந்து இறுதி நேரத்தில், புலிகளமைப்பு அழிக்கப்பட போகின்றது என்பதை உணர்ந்ததும், இந்த தலைவர்களில் சிலர் அன்று ஆட்சியில் இருந்த திமுக வின் அரசுக்கு சார்பான நிலையை எடுத்தனர். அதற்கு ஒரு உதாரணத்தை கூறுகின்றேன் முத்துகுமாரின் மரணம் ஏற்படுத்திய எழுச்சியை அடக்க உதவியதும் இவர்களே. இதுவே முற்று முழுதாக தமிழர் விரோத இந்திய அரசியல் தலைவர்கள் மீதான நம்பிக்கையை தலைவருக்கு தகர்த்திருந்தது.

இறுதி நேரம் வரை திரு சீமான் அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை நிறைவேற்ற பாடுபட்டார். அந்த நேரத்தில் தலைவருடன் இருந்த தொடர்பு திரு.சீமான் மட்டுமே இருந்தார்.(அண்ணையின் கருத்தை சூசை அண்ணை மூலமாகவே அவருக்கு சொல்லப்பட்டது) ஏனையோர் புலித்தேவனுடனும்,நடேசண்ணையுடனுமே தொடர்பில் இருந்தனர்.

திரு.சீமானிடம் பொறுப்பு கொட்டுக்க காரணம் என்ன?
**********************************************
இறுதி நாட்களில் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. சீமானின் தொடர்பு மட்டுமே இருந்தது. அதுவே சீமானின், எமது போராட்டத்தில், தலைவர் மீதான பற்றையும் போராளிகள் எல்லோருமே அன்று முள்ளிவாய்காலில் இறுதிக்கணத்தில் நின்ற போது உணர்ந்தனர். அன்று சூசை அண்ணையின் இறுதி வார்த்தை தலைவரின் வார்த்தையே. ஏனெனில் இறுதியில் அவர் தலைவருடன் தான் நின்றார். தலைவர் ஒருவரை தெரிவு செய்து பொறுப்புகளை வழங்கினார் என்றால் நிச்சையம் அவர் ஆளுமை மிக்கவராகவும், எமது போராட்டத்திற்கு விசுவாசமானவராகவுமே இருப்பார் என்பதில் ஐயமில்லை.

அதற்கு சீமானே உதாரணம். குறுகிய நாட்களில் பல லட்சம் இளைஞர்கள், யுவதிகளை ஒன்று திரட்டி ஒரு அமைப்பாக கட்டி எழுப்பியுள்ளார். அது மட்டுமில்லாது அவர்களை தலைவருக்கும், எமது போராட்டத்திற்கும் விசுவாசமாகவும், தமிழ் தேசிய உணர்வுடனும் வளர்த்து வருகின்றார். இதில் மிக முக்கியமானது தலைவரையும் எமது போராட்டத்தையும் தமிழ்நாட்டின் மூளை முடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தமையே.
நீண்ட காலம் இருந்த தலைவர்களால் செய்ய முடியாததை சில வருடங்களில் எப்படி சீமானால் அது முடிந்தது. அதில் தான் எங்கள் தலைவரின் ஆளுமையை காண முடியும். சில புல்லுருவிகள் சொல்வது போல சீமான் தானக இயக்கத்தில் வரவில்லை. சீமானை தான் இயக்கம் உள்வாங்கியது.

இறுதியாக ஒன்றை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். திரு.சீமானுக்கு எதிராக பொய்களை திரித்துவிடுவோர், ஒரு சில நிமிடங்களே, திரு.சீமான் தலைவரை சந்தித்ததாக கிட்ட நின்று பார்த்தது போல கூருகின்றானர்.

தமிழ்நாட்டிலிருந்து பல பிரபலியங்கள் வந்து தலைவரை சந்தித்து சென்றனர். ஏன் அவர்களின் பெயரை உச்சரித்து அவர்களுடன் பொறுப்பை தலைவர் கொடுக்கவில்லை?

ஒரு சில நிமிடங்கள் சந்தித்த ஒருவரிடம் தலைவர் அந்த பொறுப்பை கொடுத்திருப்பாரா? அடேய் யோசிக்கவே மாட்டிங்கலாடா? அதற்கு காரணம் இறுதி நேரத்தில் சீமானின் விடாப்பிடியான பங்களிப்பும் தலைவர் மீதான பற்றும், அவருள் எரியும் விடுதலை தீயும், அவரின் ஆளுமையுமே காரணம். அதனால் தான் அவரிடம் தலைவர் அந்த பொறுப்பை ஒப்படைத்தார். தலைவர் கைகாட்டியவருக்கு உதவுவதே, தலைவரை நேசிக்கும் அனைவரின் கடமையாகும். சீமானை மறுதலிப்பவர்கள், தலைவரை மறுதலிப்பவராகவே பார்க்கப்பட வேண்டும். அவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்களே. தயவு செய்து நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாய் இல்லை உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதும். நன்றி

இப் பதிவு நாம் தமிழர் முகநூல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட பதிவு