கார்த்திகை 27

சுதந்திரம் நோக்கி முன்னேறிச் செல்லும் தமிழீழ தேசத்தின் படிக்கற்கள்

தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று பெரும் திருப்புமுனை ஒன்றில் நிற்கின்றது. மண் மீட்பிற்கான வழிகள் தெளிவாக திறக்கப்பட்டுவிட்டது. எமது தேசம் விடுதாளி நோக்கி விரைந்து முன்னேறும் என்ற உத்தரவாதம் மக்களுக்கு தெளிவாக வழங்கப்பட்டுள்ளது.

ஓயாத அலைகள் 03ன் வெற்றி, அறிவுப்புகளுக்கான அடிப்படையாகும். அதாவது சிங்களப் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முறியடித்து, தமிழீழ தேசம் மீட்கப்படும் என்பதை இந் நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகள் உறுதி செய்துள்ளனர். வேறு விதமாகக் கூறுவதானால் தமிழ் மக்கள் விடுதலை நோக்கி விரைந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றனர் எனக் கூறல்கூடத் தவறாகமாட்டாது.

இத்தீர்க்கமான கட்டம் இலகுவாக அடையப்பட்டதல்ல. இதற்காகத் தேசியத் தலைவர் பிரபாகரனும் தளபதிகளும், போராளிகளும் தமது சக்திக்கு மீறியதாகவே உழைத்துள்ளனர். இதில் இரவு பகல் பாராத கடும் உழைப்பு, பெரும் அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் எனப் பல அம்சங்கள் உண்டு.

இதற்க்கெனப்பல தளபதிகள், போராளிகள் செய்துள்ள அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள், தாமதங்கள் என்பனவற்றை எல்லாம் தாண்டிப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்லக் காரணமாய் இருந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஓரிரு சமயங்களில் மீட்சி பெறவே முடியாத கட்டத்தை அடைந்துவிட்டதாக இராணுவ ஆய்வாளர்கள் பலரும், அரசியல் நோக்கர்கள் பலரும், ஆய்வாளர்கள் சிலரும் கருதியத்ம் உண்டு. அவற்றில் குறிப்பாக இந்திய இராணுவத்தினருடன் புலிகள் மோதலில் ஈடுபட்டபோதும்,ரிவிரெச நடவடிக்கை காரணமாக யாழ். குடாநாட்டை விட்டு விடுதலைப் புலிகள் வெளியேறிய போதும் இவ்வாறு கூறப்பட்டது.

ஆனால் விடுதலைப்புலிகள் இப்பெரும் சவால்களையும் எதிர்கொண்டு மீண்டேழுந்தார்கள். இது பலருக்கு ஆச்சரியம் அளிப்பதாகவே இருந்தது. விடுதலைப் புலிகள் இயக்கம் வேரோடு அறுபடப் போகின்றது என ஆய்வாளர்கள் எதிர்வு கூறிக் கொண்டிருக்கையில் விடுதலைப் புலிகளோ தாம் அழிக்க முடியாத சக்தி என்பதை நிருபித்தனர். இது எவ்வாறு புலிகளால் இவை சாத்தியமானது எனப் பலருக்கு அதிர்ச்சிகூட ஏற்ப்பட்டது.

அங்குதான் தமிழீழத் தேசியத் தலைவரின் ஆற்றலும், திறனும், மதிநுட்பமும் வெளிப்படுத்தப்பட்டது. தேசியத் தலைவர் பிரபாகரன் எச்சவாலையும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் பொருந்தியவர் மட்டும் என்பதல்ல, எச்சவாலையும் எதிர்த்து முறியடிக்கும் வல்லமை கொண்டவராகும் என்பதை நிருபித்தார். அதாவது பெரும் அழுத்தங்களுக்கு அவர் முகம் கொடுக்கத் தயாரானபோதும் பின்னர் அவற்றை முறியடித்தும் நிருபித்துக்காட்டினார்.

மாவீரர் நாளில் விளக்கேற்றும் நேரம் ….

இச்சமயம் தளபதிகளினதும் போராளிகளினதும் தியாக உணர்வும், அர்ப்பணிப்பும், மனவுறுதியும், தேசியத் தலைவரின் சிந்தனையும், நேரிப்படுத்தளையும் வெற்றிகரமான பாதைக்கு இட்டுச் செல்வதற்கு அடிப்படையாக இருந்தன. இங்குதான் தமிழீழத்திற்காக தம் இன்னுயிர் ஈய்ந்த மாவீரர்களின் தியாகமும், அர்பணிப்பும் வெளிவருகின்றது.

தமிழீழ விடுதலைப் போராடங்களில் இருந்து பெரியளவில் வேறுபடுவது போராட்டங்களின் அர்ப்பணிப்புச் சம்மந்தமான விடயத்திலேயே ஆகும். ஏனெனில், விடுதலைப் புலிகளின் அர்ப்பணிப்புக்கள் உலக விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனித்துவமனாவை. அதிலும் குறிப்பாக எதிரியின் கைகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக “சயனைட்”உட்கொண்டு வீரச்சாவடைவதில் இருந்து கரும்புலித் தாக்குதல்களில் தம்முயிரை ஈகம் செய்வதுவரையில் முதன்மையானவையாகவும் வேறுபாடனவையாகவும் உள்ளன.

புலிகளின் இச் செயற்பாடுகள், விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்டவர்களினாலேயே பாராட்டபட்டும் உள்ளது. குறிப்பாக இந்திய இராணுவத்தினர் புலிகளின் அர்பணிப்புக் குறித்து ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்திருக்கிறார்கள். இதனைச் சில இந்தியத் தளபதிகள் வெளிபடுத்தியும் இருந்தனர்.

இந்தவகைப் பாராட்டுக்கள் பொதுவாக விடுதலைப் புலிகளுக்கே உரியதெனினும், இவற்றுள் பெரும்பாலனாவை மாவீரர்களுக்கே உரியதாகும். ஏனெனில் இச்சாதனைகள், பாராட்டுக்கள் என்பனவற்றிற்காக அவர்கள் செய்துள்ள அர்ப்பணிப்பு, ஈகம் என்பன மீளப்பெற முடியாத அவர்களது உயிர்களாகவே இருந்துள்ளன.

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் மகத்தான சாதனைகள் பலவற்றை ஈட்டியுள்ளார்கள். உலக இராணுவ வரலாற்றில் இடம்பெறத்தக்க வகையில் இச் சாதனைகள் மகத்தானவையாகவுள்ளன. இதே சமயம் இராணுவத் தளபதிகள், ஆய்வாளர்கள் என்போருக்கு அவை அதிர்ச்சிகளையும் ஆச்சரியத்தையும் கொடுப்பவையாகவும் இருந்துள்ளன.

போரிடுதல் உயிர்துரத்தல் என்பது எதிர்பார்க்கத்தக்க தொன்றுதான். aanaal போர்க்களம் செல்பவர்கள் அனைவருமே இறப்பதும் இல்லை. அத்தோடு பெரும்பாலானோர் வெற்றி பெறுவோம் மீண்டும் வருவோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே செல்கின்றனர். ஆனால் விடுதலைப் புலிகளோ வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடனும், உறுதியுடனும் மட்டுமே செல்கின்றனர். ஏனெனில் அவர்கள் வெற்றிக்காக எத்தகைய அர்ப்பணிப்பையும் செய்வதற்கும் தயாராகவே களம் செல்கின்றனர்.

அதன் காரணமாக மிக மகத்தான சாதனைகளை விடுதலைப் புலிகளால் சாதிக்க முடிகிறது. அத்தோடு இவர்கள் தமது வெற்றியினை மக்களுக்கே உரித்தாக்கிக் கொள்கின்றனர். அதற்காக மக்களிடம் இருந்து எதையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

அவ்வாறு இல்லாதுவிடில், உயிராயுதமான் கரும்புலிகள் உருவாகியிருக்க மாட்டார்கள். அதாவது போராடுவதும், வெற்றி பெற்றுக் கொடுப்பதுமே எமது கடமை. அவற்றின் பலன் – அறுவடை என்பன மக்களுக்கே உரியது என்பதே அவர்களின் முடிவாகும்.

அவ்வாறான ஒரு சிந்தனை, உணர்வு என்பன அம்மாவீரர்களுக்கு இல்லாதுவிடில் களத்தில் அவர்கள் உயிர்விடத் தயாராகி இருந்திருக்கமாட்டார்கள். இராணுவ வரலாறு வியக்கும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கமாட்டாது. தமிழர் தேசம் விடுதலை நோக்கி வீறுநடை போடமுடியாது.

இந்த வகையில் தமிழர் தேசத்தின் விடுதலைப் பயணத்தின் ஆணிவேர்களாக இருப்பவர்கள் இம்மாவீரர்களே ஆகும். அவர்களின் தன்னலமற்ற தியாகமே இன்று தமிழினம் தலை நிமிரவும், சுதந்திர வாழ்வு நோக்கி முன்னேறிச் செல்லவும் படிக்கற்களாகவுள்ளது.

_ஜெயராஜ் _
எரிமலை 2000 இதழிலிருந்து.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”