சுமந்திரனுக்கு முருக்கங்காய் பரிசளித்தார் சம்பந்தன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு முருக்கங்காய் பரிசளித்துள்ளார் என கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரா.சம்பந்தன் தனது ஊருக்குச் சென்று திரும்பும்போது வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டுவந்து சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது வழமையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான சுமந்திரனுக்கு முருக்கங்காய் அனுப்பி வைத்துள்ளதாக அவ்வூடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதனைப் பெற்றுக்கொண்ட சுமந்திரன் ஏன் தலைவர் இவ்வாறான பரிசுப் பொருளை தனக்கு அனுப்பி வைத்தார் என்பதையிட்டு வியப்பில் ஆழ்ந்ததாக அவ்வூடகம் செய்தி வெளியிட்டுள்ளது.