ஜெனீவாவில் ஜேர்மனின் குரல் ! சர்வதேச குற்றவியில் நீதிமன்றில் சிறிலங்காவை பாரப்படுத்த குரல் கொடுங்கள் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்கா தொடர்பிலான ஆணையளரின் அறிக்கை தொடர்பிலான விவாத்தில் கலந்து கொண்டு கருத்துரை ஜேர்மனி, சிறிலங்காவை சர்வதேச குற்றவியில் நீதிமன்றில் சிறிலங்காவை பாரப்படுத்த குரல் கொடுக்க வேண்டும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.

கடந்தகாலங்களின் குற்றங்கள் தண்டிக்கப்படாத நிலை தொடரமுடியாது எனவும் ஜேர்மனி தெரிவித்த ஜேர்மனி, சர்வதேசநியாயாதிக்கத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்கலாம் எனத் தெரிவித்திருந்தது.

சிறிலங்கா தொடர்பில் தீர்மானத்தினை முன்னெடுக்கின்ற கூட்டு நாடுகளில் ஒன்றாக ஜேர்மனும் இருக்கின்ற நிலையில், தீர்மானத்தின் முதல்வரைவானது ( Zero Draft Resolution ) இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூச்சிய ( Zero ) வரைவு பூச்சிய நீதி மற்றும் பூச்சிய பொறுப்புக்கூறலை வழங்குகிறது என்பதோடு, நாங்கள் தார்மீக கோபம் அடைகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிறிலங்காவை அனைத்துலக குற்றிவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தக் கோரும் வகையில் அமையவேண்டுமெனக் கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜேர்மனிய பிரதிநிதிகள், ஜேர்மன் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இணையவழி  www.gerechtigkeitfürtamilen.de    முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்து வேட்டையில் அனைவரையும் பங்கெடுத்து ஒன்றுபட்ட தமிழர் பலர்தினை ஜேர்மன் அரசுக்கு வெளிப்படுத்துமாறு கோரியுள்ளனர்.

1) சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கான பரிந்துரையோடு, ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அனுப்ப வேண்டும்.

2) மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்குற்றங்கள், இனப்படுகொலை மீண்டும் நிகழ்வதைத் தடுக்கும் பொருட்டு, பாதிக்கப்பட்ட தமிழ்மக்களே தமிழ்த் தேசிய இனச்சிக்கலுக்கான நிரந்தர அரசியல் தீர்வினைக் காண அனுமதிக்கப்பட வேண்டும்.

சிறிலங்காவை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இந்தச் சிக்கல் பீடித்துள்ளது. இந்தச் சிக்கல் 1958, 1977, 1983 ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான கொடிய கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகளாக வெளிப்பட்டது. 1983-2009 போர்க் காலத்திலும் அதன் பின்விளைவாகவும் தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனவழிப்புக் குற்றம் ஆகியவற்றிலும் வெளிப்பட்டது.

பாதிப்புக்காளான மக்கள் பொதுவாக்கெடுப்பின் வழியாக அரசியல் தீர்வு காண்பதில் பங்கேற்க அதிகாரமளித்தல் வேண்டும். பொதுவாக்கெடுப்பு என்பதே பொருத்தமான ஜனநாயக பொறிமுறையாகும். ஏனென்றால் இலங்கைத்தீவில் நீடித்த நிலையான தீர்வுக்குத் தமிழர்களின் பங்கேற்பு இன்றியமையாதது என்பதோடு, பொதுவாக்கெடுப்பு  ஈடுசெய் நீதியின் ஓர் அம்சமாகவும் அமையும்.

3) போரினால் விதைவைகளான 90,000 தமிழ்ப் பெண்களின் நிலைகுறித்தும், காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் நிலை குறித்தும், சட்டத்துக்குபுறம்பாகச் சிறைவைக்கப்பட்ட தமிழ்போர்க் கைதிகளின் நிலைமை குறித்தும், வெள்வேறு காரணிகளின் முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு குறித்தும், இராணுவமயமாக்கல் குறித்தும், ஐ.நா மனிதவுரிமைகளுக்கான உயராணையர் அலுவலகத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை ஐ.நா மனிதவுரிமைப் பேரவைக்கு தொடர்ந்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்.

ஆகிய மூன்று நிலைப்பாடுகளை புதிய தீர்மானத்தில் உள்ளடக்க வேண்டும் என கோரியுள்ள இந்த கையெழுத்து இயக்கம் கோருகின்றது.