டிரம்ப்புக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

‘7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை விதித்திருப்பது தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்றும் சிறந்த வழியாக கருத முடியாது என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

அது கோபத்தையும், கவலையையும் அதிகரிக்க செய்யும் விடயம் என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

7 முஸ்லிம் நாடுகள் மீது அமெரிக்க ஐனாதிபதி டரம்ப் விதித்துள்ள ‘விசா’ தடை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதன்போது செய்தியாளர்களிடம் கருத்து வௌியிட்ட அவர்,

எனவே, அதற்கான தடையை நீக்க வேண்டும்.

அது எனது சொந்த கருத்து. மேலும் டிரம்பின் இத்தகைய நடவடிக்கை சரியான தீர்வை வழங்காது.

இந்த தடை விரைவில் நீக்கப்பட வேண்டும்.

குறித்த 7 நாடுகளை சேர்ந்த மக்கள் மற்றும் அகதிகள் அமெரிக்காவிற்கு வருவை தடுப்பதால் மாத்திரம் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் நுழைவதை தடுக்க முடியாது.

ஏனெனில் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்த விரும்பும் தீவிரவாதிகள் பாஸ்போர்ட் மூலம் நபர்களை அனுப்பமாட்டார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.