தங்க தலைவனே..!

சங்கத் தமிழின்
தங்க தலைவனே

தொல்காப்பிய
தொன்மையின்
நிகழ்கால நீட்சீயே

கல்தோன்றி
மண்தோன்றா
காலத்தே
முன்தோன்றிய
மூத்தக்குடியின்
நல்முத்தே
விடுதலையின்
வீரியவித்தே

தமிழில்
எழுத்துக்கள்
எத்தனையோ
இருந்தும்
ஆயுத எழுத்தால்
தமிழையும்
தமிழரையும்
அகிலத்தில்
அரங்கேற்றியவனே

புறநானூற்றை
எங்களுக்கு
பயிற்றுவிக்க
புலிப்படை
கட்டியவனே

தாய்மை
பெண்மைகானது
என்பதை
பொய்யாக்கிய
அன்னையே
ஆண்தாயே

வீரமே
வீரத்தின்
விளைநிலமே
எங்கள் பாரச்
சிலுவையை
தனியொருவனாய்
தூக்கி சுமந்தவனே

நாற்புறமும்
பகை சூழ்ந்தபோதும்
புறமுதுகு காட்டாத
புறநானூறே

மலர் மாலைக்கும்
மணிமகுடத்திற்கும்
பதவியாசைக்கும்
பகட்டான வாழ்கைக்கும்
நித்தமொரு
நாடகதத்தை
அரகேற்றுபவர்
மத்தியில்
உன் இலட்சிய விருப்பு
கொள்கை பிடிப்பு
உறுதியின் இருப்பு
உலகத்தார் திகைப்பு

உன்னிருப்பே
எம்உயிர்ப்பு-அதை
உறுதிசெய்
ஒருமுறை
அணிவகுப்போம்
நிரை நிரை..

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
-பிரபாசெழியன்.