i-love-tamil-eelam

தமிழீழம் எனது ஈழக் கனவு…..

தனித் தமிழீழம் வேண்டும். அதில் தமிழினம் மட்டுமே வாழ வேண்டும்.

புரட்சி வெடிக்கும் முகத்தில் துளிப்புன்னகை மலர வேண்டும்.
வெறியாட்டம் கண்ட கண்கள் இனி வாண வேடிக்கைகள் காண வேண்டும்.
சயனைடு எடுத்த கைகள் இனி சாகுபடி செய்யவேண்டுமே தவிர சாகும் படி செய்யக்கூடாது.
சாவுகளை கண்ட மனிதர்கள் மனச் சாந்தத்தோடு வாழ வேண்டும்.
ஆயுதம் ஏந்தி நடந்த கால்கள் கடவுள் ஆலயம் நோக்கி நடக்க வேணும்.
வெடிகுண்டு ஏந்திய கைகள் தமிழ் வெண்பாட்கள் இயற்ற வேண்டும்.
குண்டு விழுந்த கானகங்களில் குயிலின் கானம் கேட்க வேண்டும்.
ஈழத்திற்காக உயிர் திறந்தவர்களை எந்நாளும் தமிழினம் போற்றிப்பாட வேண்டும்.

மனிதர்களை வதைத்தவர் நெஞ்சில் இனியாவது மனிதம் மலர வேண்டும்.

தனித் தமிழீழம் வேண்டும்.அதில் தமிழினம் மட்டுமே வாழ வேண்டும்….

 ஈழமலர் செய்திக்காக அம்மு தமிழச்சி

(www.eelamalar.com)