அவனின் சக்திகள் எம்மை வந்தடைந்ததால்,
நாளை உயிர்க்கும் உலகின் தமிழ்……
கால் நூற்றாண்டு நிர்வாகம்- உன் கைகளில் இருந்திருந்தால்,
இரண்டு மூன்று ஜப்பானை ஈழம் கண்டு
இருக்கும்.
உன் தமிழீழ தாகத்தை-உலகம் உணர்ந்து
இருந்திருந்தால்,
அங்கே தமிழச்சிகள் வாழ்ந்து சாகும்
கனவு பலித்திருக்கும்.
விதியின் நேர்கோடேனும்-விலகாது
இருந்திருந்தால்,
ஈழத்தின் உற்பத்தியை இ்வ் உலகம்
புசித்திருக்கும்.
தன் மானத்தின் கம்பீரமே!!!!!
நாளை வந்து விடு காடையர்க்கு பாலூற்ற.
அவன் சூரியன் தான்;
கடத்தலோ?
மேற்காவுகையோ?
கதிர்வீச்சோ?
அவனின் சக்திகள் எம்மை வந்தடைந்ததால்,
நாளை உயிர்க்கும் உலகின் தமிழ்……
தமிழச்சி ( அம்மு)