121

தமிழகத்தில் பிறந்த முதல் கரும்புலியின் 25 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

கல்லறைகளும் கருத்தரிக்கும்…

14962549_230614230692756_1039557564670433142_n

கரும்புலி லெப். செங்கண்ணன் அண்ணா முதல் தம்பி விக்னேஷ் வரை தமிழக எம் உயிருக்கும் மேலான எம் உறவுகளின் உணர்வுகள் ஒவ்வொன்றும் ஒரு சரித்திரமே.. இவர்கள் தம் உயிரை விட தம் இனத்தின் மானமே பெருதென்று வாழ்ந்து தற்கொடையான எம் வீர வேங்கைகள்…

ஈழத்தில் பிறந்து நாட்டுக்காக உயிர் விட்ட போராளிகளின் மத்தியில்
தமிழ்நாட்டில் பிறந்து ஈழத்துக்காக உயிர்விட்ட அதுவும் கரும்புலியாய் வெடித்து சிதறிய போராளியின் வீரநாள்

இன்று பூநகரி படைத்தளம் அழிக்கப்பட்டு நாகதேவன்துரை அதிவேக நீருந்து விசைப்படகுகள் கைப்பற்றப்பட்டது….

“பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்”
தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

தமிழீழ தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.
தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

25 ம் ஆண்டு நினைவு வணக்க நாள் — 11.11.2018,
வரலாற்று புகழ்மிக்க ஒப்பரேசன் தவளை இராணுவ நடவடிக்கைக்கயின் வெற்றிக்கு பக்கதுணையாக பலாலி பெருந்தளத்தினுள் ஊடுருவி ஒரு கரும்புலித் தாக்குதலை நடாத்தி சிங்கள இராணுத் தலைமையை நிலைகுலைய வைக்கவும், தடுமாற்றத்திற்கும் உள்ளாக்கி விடுதலைப்புலிகளின் பலத்திற்கு வலுச்சேர்த்து 13 கரும்புலீ மாவீரர்கள் வரலாறுபடைத்த நாள் இன்றாகும்.)

(www.eelamalar.com)