தமிழ்நாட்டு மீனவர்கள் பதின்மூன்று பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12.10.2017, அன்று ஐந்து தமிழக மீனவர்களும் 17.12.2017 அன்று எட்டு தமிழக மீனவர்களுமாக 13 தமிழக மீனவர்கள் இரு தமிழக இழுவைப் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இந்திய மீனவர்களை நேற்று புதன்கிழமை (06.12.2017) மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் இம்மனுவேல் கயஸ் பல்டானோ முன்னிலையில் மீண்டும் ஆஐர்படுத்தியபோது இவர்களை தொடர்ந்து எதிர்வரும் 18.12.2017 வரை விளக்கமறியலை நீடிக்க பதில் நீதிவான் கட்டளைப் பிறப்பித்துள்ளார்.

இதனிடையே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர்களில் இருவர் நோய்த்தாக்கத்துக்கு உட்பட்டிருப்பதாக இந்தியத் துணைத்தூதரக அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.