தான் பெற்றமகனின் ஆசையை நிறைவேற்றாத தேசியத்தலைவர்…..

தலைவரின் மூத்தமகன் சால்ஸ் அடிப்படை பயிற்சிகளை முடித்து தன்னை விடுதலைப் போராட்டத்தில் முழுமையாக இணைத்துக் கொள்ளாத சிறுவனாக இருக்கும்பொழுது.ஒர் இரவுபொழுதில் வீட்டுக்குவந்தஅண்ணையிடம் மதிவதணி அன்னியார் சால்ஸ் தனக்கு வரியுடை உடுத்தி படம் எடுக்க வேணுமாம் என்று கேட்க…..

தலைவர்……

வரியுடை என்பது விளையாட்டு பொருளல்ல வரியுடைக்கென்று ஒரு புனிதம் இருக்கின்றது அதை அணிய வேண்டுமானால் விடுதலை அமைப்பில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு நாட்டுக்காக,இலட்சியத்திற்காக,அர்பணிப்புடன் செயல்பட்டு சத்தியத்திற்காக சாகதுணிந்தவன்தான் வரியுடை உடுத்தவேண்டும் என்று அவருக்கு சொல்லு.அவர் அந்த பருவத்தை எய்தும்போது நானே அவருக்கு வரியுடையை உடுத்திவிடுகின்றேன் என்று கூறி தன்ஆசை மகனின் ஆசையை நிராகரிக்கின்றார்.தலைவர் நினைத்திருந்தால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தன் செல்ல மகனின் விருப்பபடியே வரியுடை உடுத்தி படம் எடுத்து அவரது ஆசையை நிறைவேற்றியிருக்கலாம்.ஆனால் அவ்வாறு செய்ய பிரபாகரன் அரசியல்வாதி அல்ல தன் மக்களின் விடிவை நேசிக்கும் உண்மையான உன்னதமான போராளி…..

தான் பெற்ற பிள்ளைகளுக்கும் போராளி பிள்ளைகளுக்கும் ஒரு துளிகூட வித்தியாசம் பாராது ஏற்றத்தாழ்வு காணாது வளர்தானே அவனன்றி யார் உனக்கு தாய் ? ? ?

எலியென உன்னை இழந்து நகைத்தவர்கள் மத்தியில் அயராது உழைத்து அரும்பாடுபட்டு அர்பணிப்புடன் செயல்பட்டு எலியென்று இகழ்ந்த அதேவாயால் புலியென்று விளிக்க செய்தானே அவனன்றி யார் உனக்கு தந்தை ? ? ?

பொறுப்பாளர்கள்,போராளிகள்,தளபதிகள் இப்படி எல்லோருக்கும் உயிரை பறிக்கும் நஞ்சுமாலை ஒன்றை அணிவித்துவிட்டு தான் மட்டும் இரண்டை அணிந்துகொண்டு சாவை சந்திக்க எல்லோருக்கும் ஒருபடி
முன்னுக்கு நின்றானே அவனன்றி யார் உனக்கு தலைவன் ? ? ?

நிமிர்ந்து நில்…
தெளிவுபெறு…
தமிழனென்ற கர்வம்கொள்…
பிரபாகரன் வம்சம் என்று
திமிராகசொல்….

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
பிரபாசெழியன்