தமிழரின் தாகம் பிரபாகரனின் தாயகம்!
தமிழர் நாம் இத்தரணியில்
தலை நிமிர்ந்து வாழ
தன் உயிரை துச்சமென எண்ணி
தாய் மண்ணைக் காக்க வந்த
தலைமகனே வீரத்தமிழனே !..
சோதனைகளை சாதனையாக்கி
காவிய நாயகனாய்
சரித்திரம் படைக்க
மறவர் வழியில் வந்த
மாபெரும் மாவீரனே…..
நாம் இழந்த பொருள்களும்
சிந்திய இரத்தங்களையும்
பிரிந்த உயிர்களையும்
நாளைய விடியலுக்கு
அர்ப்பணம் செய்து
சுட்டெரிக்கும் சூரியனைபோல்
கயவர்களை சுட்டெரித்து
சுடர் கொழுந்தாய்
தமிழன் தமிழனாய் வாழ
வீறு கொண்ட வேங்கையாக எழுந்து
புது அவதாரத்தோடு
எழுந்து வா வீரனே ……
உலகம் வியந்து பார்க்கும்
வரலாறு கண்ட
வரலாற்று நாயகனே
அகவை அறுபத்தொன்றினில்
புத்தம் புதுபொலிவோடு
புறப்படு தலைவா……
உன் வருகைக்காய்
காத்திருக்கும் தமிழினம்…
தேசய தலைவர் அவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கhttp://