தமிழர்கள் இனிமேல் ஆயுதம் ஏந்துவதை நினைக்கமாட்டார்கள்!

தமிழர்கள் இனிவரும் காலங்களில் ஆயுதம் ஏந்துவதை நினைக்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் ஆயுதம் ஏந்தி தனிநாடு கோரிப் போராடியதன் பலனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணிதெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினர் லக்ஸ்மன் நிபுணாராய்ச்சி தெரிவிக்கையில்,

வடக்குக் கிழக்கு பிரிவினை வாதத்தை தமிழர்கள் இப்போதுவிரும்பவில்லை.

இந்நிலையில், வடக்குக் கிழக்கு அரசியல் வாதிகளுக்கு பிரிவினையைக் கோராது அரசியல் செய்யமுடியாது.

உண்மையில் சம்பந்தனோ தமிழ் மக்களோதனிநாட்டை விரும்பவில்லை.

அவர்கள் ஆயுதப்போர் மூலம் தனிநாட்டைக் கோரி அது தோல்வியில் முடிவடைந்தது. அதன் விளைவை அவர்கள் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். அதனால் அவர்கள் அதனை ஒருபோதும்விரும்பமாட்டார்கள்.

இருந்தாலும் அவர்கள் தனிநாடு என்ற மனோநிலையிலிருந்து இன்னும் விடுபடவில்லை.

அரசியல்வாதிகளின் பிழையான வழிநடத்தலே அவர்கள் தனிநாடு என்ற மனோநிலையிலிருந்து இன்னும் விடுபடாமலிருப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.