தமிழர்கள் மீதான படுகொலைக்கு அரசு பொறுப்புக் கூறுவதிலிருந்து தப்ப முயல்கிறது! -அனந்தி சசிதரன்

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக் கூறுவதிலிருந்து இலங்கை அரசாங்கம் தப்பிக்கவே முயன்று வருகின்றதாக வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு இலங்கை அரசு பொறுப்புக்கூறலை வழங்க சர்வதேச சமூகமும், தமிழ் தலைவர்களும் அழுத்தம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழாராச்சி மாநாட்டுப் படுகொலையின் நாற்பத்தி நான்காவது நினைவு தின நிகழ்வுகள் யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவத்தூபியில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே மேந்கண்டவாறு தெரிவித்தார்.