தமிழர் காதலின் அடையாள சின்னம்..

வசிக்கும் வீதியில் ஒரு பிரச்சினை என்றாலே நமக்கெதுக்கு ஊர்வம்பு என்று கணவன்மாரை கட்டுபடுத்தும் மனுசிமார்களுக்கு மத்தியில் அடுத்தவிநாடி உயிருக்கு உத்திரவாதமில்லாத போராட்ட வாழ்க்கையை தேர்தெடுத்த கணவனை எப்படிதான் காதலித்தாயோ தாயே..

கணவன் சொல்லே வேதவாக்கு என்றெண்ணியா நீ பெற்ற பிள்ளைகளை தாய்மண்ணுக்காக கொடுக்க அண்ணன் முடிவெடுத்தபோது வாயடைத்து நின்றாய்..

எந்தவொரு ஆணின் வெற்றிக்கு பின்புலமாக ஒருபெண் இருப்பாளாம்.கரிகாலனின் வெற்றிகளுக்கு பின்னால் நிச்சயம் நீயிருப்பாய்..

போராடி வெற்றிபெறுவது இல்லை இலட்சியதிற்காக போராடி சாவது என்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டிருந்தவரை காதலிக்க வைத்த உந்தன்காதல் மிகஆழமானது,அழகானது,அத்தனைஉயர்வானது,அத்தனைக்கும் மேலானது,எதனினும் மேன்மையானது.

சாதாரண சராசரி மனிதனையா நீ காதலித்து கரம்கோர்த்தாய்.உலகமே வியந்து நோக்கும் சாதனை தமிழனையல்லவா நீ வாழ்க்கை துணையாக ஏற்றாய்.உண்மையில் நீ பாக்கியஜாலிதான்.

தாமாஹாலாம்,ஷாஷகானாம் மும்தாஜ்ஜாம்,ரோமியோவாம் ஜீலியட்டாம்,அம்பிகாவதியாம் அமராவதியாம்.

இவர்கள் காதல் எல்லாம் எந்த சூழ்நிலையில் நடந்தது.
அடுத்த நிமிடம் உயிருக்கு உத்திரவாதமில்லாத வாழ்க்கையில் ஒன்றுக்கு இரண்டாக நஞ்சுமாலையை கழுத்தில் சுமந்தவனை காதலித்தாலே பெண்ணொருத்தி இதைவிட உயர்வான உன்னதமான காதல் உலகினில் உண்டோ?

எத்தனையோ இக்கட்டான மிகவும் நெருக்கடியான காலக்கட்டங்களில் தலைவர் உயிருக்கு ஆபத்தான தருணம் என்ற சூழ்நிலை வரும்போதெல்லாம் இஞ்ச பாதுகாப்பில்லை நீங்கள் வெளிநாட்டுக்கு போறியளா என்று கேட்டபோதும் வாழ்ந்தாலும் உங்களோடுதான் செத்தாலும் உங்களோடுதான் இனியொருமுறை இப்படி கேட்காதியள் என்று தன் காதல் கணவனின் நிழலாக வாழ்தாரே அன்ரியார் இவரின் தியாகம் போற்றபடவேண்டியது.

பெண்மையின் புனிதமே
உண்மையின் உறுதியே
புங்கையின் பொக்கிஷமே
உண்ணைகாதலின் உன்னதமே
காதல் கணவனையும் தாயக விடுதலையையும் உன்னிரு கண்களாக பார்த்த உன் தியாகம் போற்றதக்கது.
உன்னால் தமிழ் பெண்ணினத்திற்கே பெருமை அம்மா.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
பிரபாசெழியன்