13906715_1121890117871492_4865169789543312597_n

தமிழர் வாழ்வின் கடவுள்

தமிழ்த்தாய் ஈன்ற வீரமைந்தன்
தமிழர் வாழ்வின் கடவுள்
கார்த்திகை இருளில் சிரித்தவர்
அலைகடல் ஓரம் அவதாரமானவர்
தமிழரின் விலங்குடைக்க
தரணியில் தமிழ் புகழ் பரவ
கண்ணென தமிழரை காக்க பிறந்தவர்
செங்கதிர் வீசும் இவர் பார்வை
இமயமாய் எழுந்த இவர் தோற்றம்
தந்தையும் தாயுமாய் நின்றவர்
செந்தமிழ் தவழும் சிரிப்பு
வேதங்கள் கண்டதில்லை இவர்
போர் வரலாறு
வேங்கை கொடி விண் முட்ட
சிகரமாய் எழுந்த எம் தேசப்பிதா
வாழ்க நீயும் பல்லாண்டு
வரலாறுகாணும் படை வென்று

-சிவா TE