தமிழா நீ எப்போதுதான் தலைநிமிரப் போகின்றாய் ???

15078597_216348428798539_7209387038534003893_nதமிழா நீ எப்போதுதான் தலைநிமிரப் போகின்றாய் ??? இன்னும் எத்தனை காலத்துக்குதான் இப்படியே காலம் தள்ளுவாய் ??? கல்லும் மண்ணும் பிறக்கும் முன்பே பிறந்த உயர்குடி மைந்தனே நீ படைவைத்து அரசாண்ட காலத்தில் இன்று சந்திரனுக்கு சென்று சாதனை படைத்தானே அவன் ஆடு மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்தான்.செவ்விந்தியனை கொன்று சிம்மாசனம் பிடித்தவன் சர்வதேச போலீஸ்காரன் ஆகிவிட்டான்.

நீ கப்பலேறி கடாரம் வென்றபோது ஜப்பான்காரன் எக்ஸ்போ நடத்தவில்லை தடிக்குச்சிகளால்தான் தட்டி கட்டி வாழ்ந்தான்.ஆனால் கோட்டைகட்டி ஆண்ட நீ மட்டும் மதுவுக்கும் மாதுவுக்கும் பணத்தாசைக்கும் அடிமையாகி சலுகைகளுக்கு தட்டேந்தி நிற்கின்றாய் இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த பிழைப்பு ??? இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த இழிநிலை ??? எஞ்சியிருக்கின்ற மிச்சமும் அழிந்தொழியும் வரையிலா உன் காத்திருப்பு ???

எந்த கருத்தும் அதன் தொடக்கநிலையில் ஒருசிலரே ஆதரிக்கும் சிறுபான்மையாகதான் இருக்கும். அதற்காக கலங்காதே.விடா முயற்சியால் வென்ற வீரவரலாறு ஆயிரமிருக்கு. நடக்க வேண்டுமா எழுந்துபார்,கடக்க வேண்டுமா பாய்ந்துபார்,ஊர்போக வேண்டுமா போவேன் என நம்பு,உயிர்வாழ வேண்டுமா சாவேன் என நம்பு நம்பிக்கைதானே நாட்களை நகர்த்துகின்றது.
புறநானுற்று வீரத்தை படி

எம் தமிழினத்தில் வாழ்ந்து மறைந்த வீர மறவர்களின் வாழ்க்கையை படி நெருப்பாற்றில் நீந்தி குளித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சாதனைகளை படி வாழும் வரலாறு அண்ணண் பிரபாகரனின் வீரம்,தியாகம்,அர்பணிப்பு,நேர்மை இவற்றை படி பிறகு நீ வரலாறு படைப்பதை யாராலும் தடுக்க முடியாது. தலைவன்_காலம்ந ம்காலம்அ துதவறினால்இ ல்லை தமிழீழம்.

தமிழரின்_தாகம்_தமிழீழ_தாயகம்
பிரபாசெழியன்.

(www.eelamalar.com)