8

வரலாற்று நாயகன் தம்பி பிரபா வாழ்க

தமிழினம் கண்ட முதலாயுதமே
தலைவா தம்பி பிரபா!
தலை வணங்குகின்றோம்;
தலையறுக் பட்டாலும்
தளை உடைக்கப் பட்டுத்
தமிழினத்தின் தலை நிமிர்த்தும்
தன்மான வீரா!
தமிழீழ அன்னை
உனையீன்ற போது தான்
தமிழருக்கெல்லாம்
குருதி சிவப்பாயிற்று;
அம்புலியைக் காட்டி
அன்னை உனக்கு
அமுதூட்டும் போது
புலிப்பாலைக் கேட்டு நீ
புன்னகைக்கக் கண்டே
நாய் நரிக் கூட்டங்கள்
மறைந்து முடங்கின;
ஆட்டுவிக்கும் குரங்க்கெனத்
தமிழினக் கொத்தடிமை;
விலங்கொடிக்கக் கர்ஜித்த்ப்
பாய்கின்ற வரிப்புலியே!
புறநானுற்று இலக்கியத்தை
வரலாறாய்ப் படைக்கின்ற
புலித்தலைவா!
நாளையக் காவியங்களின்
நாயகனே என்றும்
வாழ்க வாழ்கவே………..

-ஓயாதா அலைகள்