தமிழீழத்தின் தலைநகரம் மானமலையான எங்கள் கோணமலை.

அலையாடை உடுத்திய அழகிய நகரம் திருகோணமலை பகலில் சூரியன் சுட்டெரிக்கும் சுடுநிலமாகவும் இரவானால் கடல்காற்று தழுவும் கவிநகரமாகவும் பொழிந்து கிடக்கின்றது இந்த புயல் பூமி.

வடக்கே கொக்கிளாய் குடாவின் பக்கமாக தொடங்கி தெற்க்கே கொட்டியார குடாவுக்கு அப்பாலும் என நீண்டு அழகாய் கிடக்கின்றது முன்னர் தமிழர் ஆண்ட நிலம்.வீணைக்கொடி போட்ட வீரன் இராவணேஷன் சாம கானங்களுக்கு தலையாட்டிய பூமியிது.குளமும் கோட்டமும் கட்டி குடமுழக்காட்டிய குளக்கோட்ட மகாராஜன் உலவிய பூமியிது.பாலும் தேனும் பரவ ஒரு நாளில் வேலும் வில்லும் விளையாடிய வீர பூமியிது.

காலக்கழிப்பில் திட்டமிட்ட குடியேறிகளால் ஈழத்தமிழர் வாழ்வை நசுக்கும் வந்தேறு குடிகளால் இந்த தமிழர் ஆண்ட நிலம் தன் அழகை இழந்தது, வாழ்வை தொலைத்தது,இன்று அன்றாட வாழ்வுக்கே அந்தரித்து கிடக்கின்றது.சிங்க கொடிகளாலும் புத்தனின் சிலைகளாலும் எங்கும் இருள் பரவி இடியூண்டு கிடக்கிறது.

மீண்டும் எங்கள் ஈழத்தலைவன் பிரபாகரன் சேணைக்கொண்டு தலைநகரை மீட்க உறுதியேற்ப்போம்
மான மலையான எங்கள் கோணமலைமீது நாளை எம்புலிக்கொடி தலையசைக்கும்.கோடி இடர்களும் கொடியோரின் தடைகளும் காலில் பூட்டிய மிதியாய் தமிழீழம் காண்போம்.

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

-பிரபாசெழியன்.