தமிழீழத் தாயகத்திற்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையான தமிழீழ விடுதலைப் புலிகளின் விநியோக நடவடிக்கைத் தடங்கள்…!

ஒரு நாட்டின் அனைத்து வகையிலான வளர்ச்சிக்கும் ஏற்றுமதி இறக்குமதி ஒரு முக்கியமான பங்கு வகிக்கின்றது.
அந்த வகையில் தமிழீழத்திற்கு பலம் சேர்க்கும் இந்த நடவடிக்கையில் கடற்புலிகளின் பங்கு வார்த்தைகளால் சொல்ல முடியாத அளப்பரிய பங்காகும்.

இவ்விநியோக நடவடிக்கையில் எத்தனையோ மாவீரர்களுடைய தியாக அர்ப்பணிப்புக்கள் நிகழ்ந்து இருக்கின்றன.
கடல் சார்ந்த இந்த நடவடிக்கையில் எமது போராளிகள் எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும் எமது மக்களுக்கும்,தாய் மண்ணுக்கும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தியாவிலிருந்து ஒரு தொகை பொருட்கள் கடற்புலிகளின் விநியோக நடவடிக்கை மூலம் தமிழீழத்திற்க்கு கொண்டுவருவதற்காக ஒரு வேலைத் திட்டம் கடற்புலிகளுக்கு தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது அதற்கமைவாக 06.10.1999 அன்று ஏற்கனவே நிலைகொண்டிருந்த மன்னார் மாவட்ட கடற்புலிகளுடன் .மேலதிகமாக சாள்ஸ்
படையணியும் இணைந்தது.கடற்புலிகளின் சிறப்புத்தளபதியால் திட்டம் விளங்கப்படுத்தப்பட்டது இத்திட்டத்தின் படி கடற்புலி மேஐர் காமினி விநியோக நடவடிக்கைக்ப் பொறுப்பாக செல்வதென்றும் விநியோகப் பாதுகாப்புக்குப்பொறுப்பாக எழிற்கண்ணணும் நியமிக்கப்பட்டருந்தார்கள் .ஆனால் இறுதிநேரத்தில் இந்தியாவில் பொருட்கள் எடுக்கும் இடத்தில் சிறிது தூரம் நடந்து எடுக்கவேண்டி இருந்ததால் போராளிகள் கூடுதலாக போடப்பட்டு இத்திட்டம் மாற்றப்பட்டது.புதிதாக மாற்றப்பட்ட திட்டத்தில் விநியோகநடவடிக்கைக்குப் பொறுப்பாக எழிற்கண்ணணும் விநியோகபாதுகாப்புக்குப் பொறுப்பாக அன்றையதினம் சிறப்புத்தளபதியுடன் வந்திருந்த கடற்புலிகளின் துணைத்தளபதி லெப் கேணல் நிறோயனும் நியமிக்கப்பட்டு விநியோக நடவடிக்கை ஆரம்பமானது.07 .10.1999 அன்று அதிகாலை காலநிலை சீரின்மையால் விநியோக அணி மீது தீடிரென வந்த சிறிலங்காக் கடற்படையினர் தாக்குதல் நடாத்தினர் அதனைத்தொடர்ந்து எமது கடற்த்தாக்குதல் அணிக்கும் கடற்படையினருக்கும் அதிகாலை நான்குமணிவரை கடும் கடற்சமர் நடந்தது .விநியோக நடவடிக்கைப் போராளிகள் எவ்வித இழப்பகளுமின்றி தளம் திரும்பினர்.இவ் விநியோக பாதுகாப்புச் சமரில் தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவரும் தென் தமிழீழ விநியோக நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்தவரும் பல கடற்சமரை கடலில் செவ்வனவே வழிநடாத்தியவரும் கடற்புலிகளின் துணைத் தளபதியுமான லெப் கேணல் நிறோயன் உட்பட்ட போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

தொடாரும்…..