12743969_121460838243874_147819745814738631_n

தமிழர் வரலாற்றின் பாதுகாப்புக்கவசம்

அன்று ஈழ அறவழிப் போராட்டத்தில் குருதித் திலகம் இட்டவர்.
பின்னாளில்!!!

ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில்
எப்பொழுது அறவழி அரசியற்பிரசார மேடைகளில்
குருதித் திலகம் இடப்பட்டதோ அப்பொழுதே மாணவ
இளைஞர்களின் கருவி ஏந்திய அரசியற் போராட்டம்
தொடங்கி விட்டது.

இவ்வாறு நெற்றியில்
குருதிப் பொட்டு வைப்பதை தொடர்ச்சியாக
செய்து வந்த ஒரு இளைஞர் பின்னாளில் கருவி ஏந்திய
போராட்ட இயக்கத்தில் இணைந்த போது அவர் வைத்த குருதிப்
பொட்டுக்களை நினைவுகூர்ந்து அவருக்கு பொட்டு என்று இயக்க
பெயர் வைக்கப்பட்டது.

அவரே பின்னாளில் உலகை அதிர
வைத்த உலக புலனாய்வுத்துறைகளுக்கு நிகராக சவாலாக
நின்ற தலைவரின் நிழல். இவரால் தான் தமிழினத்தின்
வரலாறு மாற்றி எழுதப்படும். தமிழர் வரலாற்றின்
பாதுகாப்புக்கவசம்.

இவர் தமிழினத்தின்
விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தின்
புலனாய்வு துறை பொறுப்பாளர்
தளபதி.பொட்டம்மான் அவர்கள்.

படம் – தமிழினத்தின் தன்னிகரில்லா தலைவருடன்
பொட்டம்மான் அவர்கள் 1983 களில் கோவையில்
எடுக்கப்பட்ட புகைப்படம்.

“”தமிழரின் தாகம் தமிழ் தாயகம்””
தமிழர்க்கு என்று ஒரு தமிழ்த்தாயகம் அமையும்
வரை இடைவிடாது சமர்செய்வோம். மொழி,இனம்
காக்கின்ற தலைவனின் வழி நின்று வாழ்வோம்.

(www.eelamalar.com)