தமிழீழம் எங்கள் உயிர்!அவ்வுயிரே எங்கள் தேசியக் கொடி!

ஏறுது பார் கொடி ஏறுது பார்.

ஏறுது பார் கொடி ஏறுதுபார்
ஏறுது பார் கொடி ஏறுதுபார்-இங்கு
ஏறுது பார் கொடி ஏறுது பார்-தமிழ்
ஈழத்தின் வேதனை தீர்த்த கொடி-எட்டு
திக்கிலும் மானத்தைச் சேர்த்த கொடி
காலத்தை வென்றுமே நின்ற கொடி
புலி காட்டிய பாதையில் சென்ற கொடி

ஏறுது பார் கொடி ஏறுது பார்

செர்க்க நிறத்திலே வேங்கை நடுவிலே
வீறிடும் கொடியிது-தமிழ்
மக்களைக் காத்த நம் மான மாவீரரை
வாழ்த்திடும் கொடியிது
புலி வீரத்தின் கொடியிது
மாவீரரின் கொடியிது

எத்தனை எத்தனை வேங்கைகள் ரத்தத்தில்
ஏறிய கொடியிது-பெரும்
சத்திய வேள்வியில் செத்தவர் மீதினில்
சத்திய கொடியிது
தமிழ் ஈழத்தின் கொடியிது
புலி ஏந்திய கொடியிது

சாதிகள் சண்டைகள் சாய்த்து விழுத்திய
சாதனைக் கொடியிது-சங்கு
ஊதி முழங்கிட ஊர்மனையாவிலும்
உலவிய கொடியிது
சம தர்மத்தின் கொடியிது
எங்கள் தாய்வள் கொடியிது

ஆயிரம் ஆயிரம் வீறென வேங்கைகள்
ஆக்கிய கொடியிது -பிரபாகரன்
என்றிடும் காவிய நாயகன்
போற்றிடும் கொடியிது
தமிழ் தேசத்தின் கொடியிது
எங்கள் தேசிய கொடியிது
எங்கள் தேசிய கொடியிது
எங்கள் தேசிய கொடியிது
எங்கள் தேசிய கொடியிது.

தமிழீழத் தேசியக்கொடியில் இருக்கும் இரு துப்பாக்கிகளும் பண்டார வன்னியனை நினைவு கூறுகின்றது.
வன்னியை இறுதியாக ஆண்ட தமிழ் மன்னன்.பாண்டார வன்னியனின் கொடி குறிக்கும் வாள் என்பதினால் தமிழீழத் தேசியக்கொடியில் பொறிக்கப்பட்டது.

போராட்டம் பல வெற்றிகளுடன் அடியெடுத்த தருணம் ஓயாத அலைகள்-01 முல்லைப்படைத்தள வெற்றி,இதில் இரண்டு பீரங்கியைக் தமிழீழவிடுதலைப்புலிகள் கைப்பற்றினர்.

இதே முல்லை மண்ணில் பல வருடங்கள் முன்(நூற்றாண்டுகள்)வெள்ளையன் கோட்டையை வீழ்த்தி பண்டாரவன்னியன் இரண்டு பீரங்கிகளை கைப்பற்றியது போரியல் வரலாற்றில் தமிழரின் வீரத்தின் ஒற்றுமைக்கு சான்று ஆகும்.

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களே “விடுதலைத் தீப்பொறியில்” குறிப்பிட்டுள்ளார்.தமிழரின் வரலாறு குறித்து நிற்கிறது.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

கல்லறைச்சுவடுகள்