தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியாவில் மாபெரும் விளையாட்டுப் போட்டி 2018…..

தமிழீழ வெற்றிக்கிண்ணத்தை வெல்லப் போவது யார்???

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒவ்வொரு வருடமும் நடார்த்தப்பட்டு வரும் உலகத் தமிழர் விளையாட்டுப் போட்டி இம் முறை பிரித்தானியாவில்…

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் தியாகத் தீபம் லெப். கேணல் திலீபன் அண்ணாவின் நினைவின் பெயரில் ஒவ்வொரு வருடமும் உலகத் தமிழர் விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகின்றது.

இம் முறை இவ் விளையாட்டுப் போட்டி ஆடி மாதம் (ஜூலை) 29ம் திகதி பிரித்தானியாவில் உள்ள கென்ரன் மைதானம் எனும் இடத்தில் நடைபெறும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல கருத்து முறன்பாட்டால் மற்றும் பல் வேறுபட்ட செயற்பாடுகளால் பிரிந்து நிற்கும் எம் புலம்பெயர் இனத்தை ஒன்று சேர்க்கும் ஒரு செயற்பாடாகவே இவ் விளையாட்டுப் போட்டி நடைபெறுகின்றது.

எம் இனத்துக்கென தனி நாடு தமிழீழம் இருந்திருந்தால், அடைந்திருந்தால் எம் இனத்தின் விளையாட்டுத்துறையின் வீர, வீராங்கனைகளின் பெயர்கள் பல உலக சாதனைப் பட்டியலில் எழுதப்பட்டிருக்கும். இது மறுக்கப்பட முடியாத உண்மை…

தமிழீழம் எனும் எம் நாடு விளையாட்டுத்துறையிலும் இவ் உலகத்துக்குப் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கும்…

மழுங்கடிக்கப்பட்ட எம் இன விளையாட்டு வீர, வீராங்கனைகளின் சாதனைகளை உலகறியச் செய்யும் செயற்பாடாகவும்,
மறைந்து போகும் எம் இனத்தின் கலாச்சாரம் மற்றும் எம் பாரம்பரிய விளையாட்டுக்களை அழிய விடாது தடுக்கும் செயற்பாடாகவும் இவ் விளையாட்டுப் போட்டி ஒவ்வொரு வருடமும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடார்த்தப்பட்டு வருகின்றது.

தமிழீழ, தமிழக விளையாட்டு வீர, வீராங்கனைகளே இவ் விளையாட்டுப் போட்டியில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

எம் தமிழீழத்தின் பெருமையை உங்கள் சாதனைகளினால் உலகறியச் செய்யுங்கள்.

நீங்களும் உங்கள் விபரங்களை பதிவு செய்ய கீழுள்ள படத்தை அழுத்தவும்

களத்தில் மட்டுமல்ல கால் பந்தாட்டத்திலும் எதிரணியை ஓடவிடுவோம்.
துப்பாக்கியால் மட்டுமல்ல துடுப்பாட்ட மட்டையிலும் குறிபார்த்து அடிப்போம்.
தீரத தமிழீழத் தாகம் கொண்டவர்கள் நாம் ஒருபோதும் தமிழீழத்தை விட்டு பின்வாங்கமாட்டோம்.
ஒன்றிணைவோம் உலகத்துக்குக் காட்டுவோம் நாம் தமிழீழத் தாயின் பிள்ளைகள் என்று…

இதுவும் எமது போராட்டத்தின் ஒரு வடிவமே எமது பலம் எம் இனத்தின் ஒற்றுமை. ((ஆலணி இன்னும் இருந்திருந்தால் அன்றே தமிழீழத்தை அடைந்திருப்போம். களத்தில் இருந்து பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா கூறியது.))

எமது கரங்களை இறுக்கிப் பிடித்தால் தமிழீழத்தின் கதவு சுலபமாகத் திறபடும்…

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

பதிவு
-மயூ தமிழீழம் (லண்டன்)