தமிழ்மக்கள் ஏன் போராட வேண்டும்..??

ஒரு விடுதலைப் போராட்டம் என்பதன் பரிணாம வளர்ச்சிக்கும் அதன் வெற்றிக்கும் வித்திடுவது ஆயுதப் போரே.அத்தகைய ஆயுதபோரென்பது முற்று முழுதான வன்முறையால் தம்மீது திணிக்கப்படும் பயங்கரவாதத்தை எதிர்த்து முறியடிப்பதாகும்.எனவே அப்போர் சில பாரிய வெற்றிகளையும் சில தோல்விகளையும் அதேவேளை தந்தோரபாய ரீதியிலான பின்னகர்வுகளையும் கொண்டதாக இருக்கும்.தமிழீழ விடுதலைப்போரையும் அதன் பரிணாம வளர்ச்சிக்கு காரணமான தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றை உற்றுநோக்கும்போது இதன் உண்மை தன்மையை நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

எதிரியின் மிகவும் பாரிய இராணுவ நெருக்கடிக்கு தமிழர் தரப்பு முகம்கொடுத்த போதெல்லாம் மிகுந்த நிதானத்துடனும் தன்னம்பிக்கையுடனும் பின்னகர்வதனூடாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பலத்தை சிதைய விடாமல் பாதுகாத்தமையும் அதனூடாக சிங்கள தேசத்திற்கு இராணுவ ரீதியாகவும்,பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பாரிய நெருக்குதல்களை கொடுக்கூடிய பெரிய அளவிலான தாக்குதல்களை நடாத்தி வெற்றி பெற்றமையும் குறிப்பிடதக்கது.

உதாரணமாக சொல்லப்போனால் 1995 ம் ஆண்டு யாழ்குடா நாட்டை ஆக்கிரமிக்கும் நோக்குடன் எதிரியால் முன்னெடுக்கபட்ட “சூரியகதிர்” நடவடிக்கையின்போது புலிகள் தற்காப்பு சமரையும் அங்காங்கே சில முறியடிப்பு தாக்குதல்களையும் நடாத்திவிட்டு தந்தோரபாயமாக வன்னிக்கு பின்வாங்கியிருந்தனர்.இதன் போது வலிகாமம் மக்களும் குடாநாட்டைவிட்டு வன்னி பகுதிக்கு இடம்பெயர்ந்தனர்.புலிகளின் இந்தகைய தந்ரோபய பின்னகர்வை சிங்களதேசம் இது புலிகளின் தோல்வி எனவும் புலிகள் போரிடும் வலுவை இழந்துவிட்டார்கள் எனவும் சர்வதேசத்திற்கு பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்த வேளையில்தான் தேசிய தலைவரின் மதிநுட்பத்துடன் ஒருங்கிணைத்து பாதுகாக்கபட்ட பலம்ஊடாக ஒயாதஅலைகள் 1 இராணுவ நடவடிக்கையின் மூலம் முல்லைதீவு சிங்கள படைமுகாம் துடைத்தழிக்கப்பட்டு அப்பிரதேசம் தமிழர் வசப்படுத்தப் படுகின்றது.

அதுபோலவே “சத்ஜெய” இராணுவ நடவடிக்கையினூடாக கிளிநொச்சிவரை ஆமி கைப்பற்றிய போதும் சரி,”ஜெயசிக்குரு”இராணுவ நடவடிக்கையினூடாக வன்னியின் தென்பகுதி எதிரியால் ஆக்கிரமிக்கபட்டபோதும் சரி விடுதலை இயக்கம் தந்ரோபாய ரீதியிலான முறியடிப்பு சமர்களை நடாத்தியிருந்ததும் புலிகளின் ஆளணி பலம் பெருமளவில் சிதையவிடாத நகர்வுகளுமே பின்காலத்தில் “ஓயாத அலைகளாக”சிங்கள ஆக்கிரமிப்பு பிரதேசங்களை மீட்டெடுத்ததும், அதுபோலவே ஆணையிறவு பெருந்தள துடைத்தழிப்புக்கு வித்திட்டதும் தேசியதலைவரின் தொலைநோக்கு பார்வையே.

நிலைமை இப்படியிருக்க அன்றோதொட்டு இன்றுவரை எந்தவொரு சிங்கள தலைமையிடமிருந்தும் தமக்கு தீர்வுகிட்டும் என்றோ,தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் அதை பெற்று தருவார்கள் என்றோ தமிழ்மக்கள் எதிர்பார்ப்பது வேடிக்கையாகும்.அன்றும்சரி இன்றும்சரி அவ்வாறான எதிர்பார்ப்பு முட்டாள்தனமானது என்றே கடந்த காலங்கள் நமக்கு உணர்த்தி இருக்கின்றது.

தமிழர்கள் நாங்கள் எங்களது போரிடும் வல்மையினாலும் போராட்டத்தின் வெற்றியினாலுமே தமிழீழ தேசத்தின் உதயமும் அதன்வழி தமிழீழ மக்களின் சுதந்திரமான சுயமான வாழ்வும் அமையும் என்பதில் தமிழ்மக்கள் தெளிவுபெற வேண்டும்.அத்தகைய எண்ணப்பாட்டின் எதார்த்த புறநிலைகளுக்கேற்ப இலக்கினைநோக்கி முன்னகரவேண்டும்.தமிழ் இளைஞர்கள் போரியல் நுணுக்கங்களை கற்றுதேறி போர்வீரர்களாக அணிவகுக்கவேண்டிய தேவையை உணரவேண்டும்.எந்தவொரு இனமும் தமக்காக முற்று முழுதாக போராடாமல் அவர்கள் எந்தவொரு நாட்டின் அங்கீகாரத்தை எதிர்பார்க்க முடியாது.எனவே பூரணமாக படைதிரட்டி கேந்திர முக்கியதுவம் வாய்ந்த பகுதிகளை தமிழர்கள் சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பதன் மூலமாகவே தமிழர்களுக்கான உலக அங்கீகாரத்தை பெறமுடியும்.

தமிழர்களின் விடுதலை என்பதும் தமிழீழ தேசத்தின் புலர்வு என்பதும் எதிர்காலத்திலும் சமாதான ரீதியாக ஒருகாலமும் பெற்றுகொள்ள முடியாது என்பதையே இலங்கையின் பலசகாப்தகால வரலாறு சுட்டிநிற்கின்றது.எனவே எதிர்வரும் காலங்களில் தமிழர் தரப்பு ஈட்டபோகும் போரியல் வெற்றிகளே தமிழ்மக்களின் அடிப்படை அபிலாஷைகளான தாயகம்,தேசியம்,தன்னாட்சி உரிமை என்பதை அவர்களுக்கு ஈட்டிதரும் என்பதையே இன்றைய காலம் நமக்கு உணர்த்தி நிற்கின்றது.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.
பிரபாசெழியன்.